கொள்கைகளை தளர்த்திய அஜித்...வேற லெவல் பிளான் போடுறார் போலவே?
சென்னை : சினிமாவிற்கு வந்தது முதல் பல ஆண்டுகளாக கடைபிடித்து வந்த தனது கொள்கைகளை நடிகர் அஜித், தற்போது மாற்றிக் கொண்டுள்ளார். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என கோலிவுட்டில் பல கருத்துக்கள் நிலவுகிறது. இருந்தாலும் அஜித்தின் இந்த திடீர் மாற்றம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கோலிவுட்டில் ரசிகர்களின் அமோகமான ஆதரவுடன் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வரும் டாப் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். நடிப்பை தாண்டி இவரை பலரும் கொண்டாடுவதுடன், தவித்துவமான மனிதர் என்ற பெயரையும் வாங்கி வைத்துள்ளார் அஜித். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த வலிமை படம் 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது.

ஏகே 61 ஷுட்டிங் ரெடி
அடுத்ததாக ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் கூட்டணி மீண்டும் இணையும் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் 11 ம் தேதி துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட கதை என்றும், இதில் ஹீரோ-வில்லன் என அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது.

ஆச்சரியப்படுத்திய அஜித்
யாரும் எதிர்பாராத விதமாக அடுத்த படத்திற்கு கதை கேட்டு ஓகே சொல்லி உள்ளார் அஜித். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், இந்த படத்தை தாங்கள் தான் தயாரிக்க உள்ளதாகவும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

கொள்கையை தளர்த்திய அஜித்
அஜித், கிட்டதட்ட 30 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக ஒரு சமயத்தில் ஒரு படத்தில் மட்டுமே கமிட்டாகி நடிக்க வேண்டும். அதை முடித்த பிறகே அடுத்த படத்தின் வேலைகளில் இறங்க வேண்டும் என்பதை விடாபிடியான கொள்கையாக கடைபிடித்து வருகிறார் அஜித். ஆனால் தற்போது தனது இத்தனை ஆண்டு கால கொள்ளையை தளர்த்தி, ஒரே சமயத்தில் அடுத்தடுத்த படங்களுக்கு வரிசையாக கதை கேட்டு வருகிறாராம் அஜித்.

அடுத்து யாருடன் கூட்டணி
ஏகே 61, ஏகே 62 மட்டுமல்ல ஏகே 63, ஏகே 64 படங்களுக்கு கதை கேட்டு ஓகே செய்து விட்டாராம் அஜித். லேட்டஸ்ட் தகவலின் படி, ஏகே 63 படத்திற்காக சிறுத்தை சிவாவிடம் ஓகே சொல்லி விட்டாராம் அஜித். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக சிறுத்தை சிவா - அஜித் ஜோடி இணைய உள்ளது.

இனி டூயல் ரோல் தான்
இதே போல் ஏகே 64 படத்திற்காக டைரக்டர் ஸ்ரீ கணேஷிடம் கதை கேட்டு ஓகே செய்து விட்டாராம் அஜித். எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்க போகும் படம் கேங் ஸ்டரை மையமாகக் கொண்ட கதையாம். மதுரையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கதையில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். ஏகே 62, 63 படங்களை முடித்த பிறகு இந்த படத்தை துவங்க போகிறாராம் அஜித்.


Click it and Unblock the Notifications











