»   »  விவேகம் டப்பிங்கை முடித்துக் கொடுத்தார் அஜித்.... ஆக 11-ம் தேதி வெளியீடு!

விவேகம் டப்பிங்கை முடித்துக் கொடுத்தார் அஜித்.... ஆக 11-ம் தேதி வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டப்பிங் முடிந்ததால், ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Select City
Buy Vivegam (U/A) Tickets

வழக்கமாக தனது படங்களுக்கான டப்பிங்கை இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடித்துக் கொடுத்துவிடுவார் அஜித். ஆனால் விவேகம் படத்துக்கு டப்பிங் பேச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டுள்ளார்.


அஜித் பேசிக் கொடுத்ததும், படத்தின் டப்பிங் வேலை முழுமைடைந்துவிட்டது.


அறிவிப்பு

அறிவிப்பு

இதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி படத்தை பிரமாண்டமாக வெளியிடப் போகிறோம் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்.


பாடல்கள்

பாடல்கள்

இந்தப் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சர்வைவா, தல விடுதலை ஆகிய இரு பாடல்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.


இம்மாத இறுதியில்

இம்மாத இறுதியில்

மொத்த பாடல் ஆல்பமும் இம்மாத இறுதியில் வெளியாகிறது. பிரமாண்ட விழாவெல்லாம் இல்லாமல், நேரடியாக கடைகளில் விற்பனைக்கு வருகின்றன. இணையத்திலும் அனைத்து பாடல்களும் கிடைக்கும்.


அக்ஷரா

அக்ஷரா

படத்தில் அஜித் ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாஸனும் நடித்துள்ளனர். அக்ஷராவின் முதல் தமிழ்ப் படம் இது. அனிருத் இசையமைத்துள்ளார்.


English summary
Actor Ajith has completed his dubbing for Vivekam
Please Wait while comments are loading...