»   »  இது என்னடா கொடுமை: பிரபாஸுக்கு வந்த அதே சோதனை அஜீத்துக்கும்

இது என்னடா கொடுமை: பிரபாஸுக்கு வந்த அதே சோதனை அஜீத்துக்கும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டீஸர் விஷயத்தில் பிரபாஸுக்கு வந்த அதே சோதனை அஜீத்துக்கும் வந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் படம் விவேகம். விவேகம் படத்தின் டீஸரை வெளியிடுமாறு அஜீத் ரசிகர்கள் சிவாவுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.


இதையடுத்து ஒரு வழியாக நள்ளிரவில் டீஸர் வெளியிட்பட்டது.


லீக்

டீஸரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு அது இணையதளத்தில் கசிந்துவிட்டது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.


பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிடப்பட உள்ள இந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.


டீஸர்

சாஹோ படத்தின் டீஸரை பாகுபலி 2 படத்தோடு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் டீஸரின் தெலுங்கு பதிப்பு மட்டும் இணையதளத்தில் கசிந்துவிட்டது.


பாகுபலி 2

பாகுபலி 2

சாஹோ டீஸர் மட்டும் அல்ல பாகுபலி 2 காட்சிகள் கூட இணையதளத்தில் கசிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸின் சாஹோ டீஸர் மும்பையில் எடுக்கப்பட்டது.


English summary
Ajith has faced the same problem as Prabhas when it comes to teaser release. Vivegam teaser got leaked online just like Prabhas starrer Saaho teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil