தியேட்டருக்கு வந்து பீஸ்ட் படம் பார்த்த அஜித் குடும்பம்...யாரெல்லாம் வந்திருக்காங்க தெரியுமா?

சென்னை : சோஷியல் மீடியாவில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக் கொள்வது காலம் காலமாக வந்து வருகிறது. ஆனால் அவர்கள் இருவரும் நட்புடன் தான் இருக்கிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது.

விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசானது. 5 மொழிகளில் ரிலீசான இந்த படம் முதல் நாள் வசூலிலேயே வலிமை படத்தின் முதல் நாள் வசூலை வீழ்த்தி விட்டது. பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், விஜய் ரசிகர்கள் தொடர்ந்து பீஸ்ட் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மாஸ் காட்டும் பீஸ்ட்

மாஸ் காட்டும் பீஸ்ட்

பீஸ்ட் படத்தில் ரா ஏஜன்ட் ரோலில் நடித்துள்ள விஜய், தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்பட்ட மாலில் சிக்கி உள்ள பொதுமக்களை, தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவார். அதிரடி ஆக்ஷன், த்ரில்லர், காமெடி கலந்த பீஸ்ட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வேற லெவலில் ஹிட்டாகி விட்டன.

பீஸ்ட் பார்த்த அஜித் குடும்பம்

பீஸ்ட் பார்த்த அஜித் குடும்பம்

பிரபலங்கள் பலரும் பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு எந்த கருத்தும் சொல்லாம் அமைதியாகி விட்டதாக கூறப்படும் நிலையில், அஜித் குடும்பத்தினர் இன்று சென்னை சத்யம் தியேட்டரில் பீஸ்ட் படம் பார்த்துள்ளனர். அஜித்தின் மனைவி ஷாலினி, அவரின் மகள் ஆகியோர் தியேட்டருக்கு வந்து, ரசிகர்களுடன் சேர்ந்து பீஸ்ட் படம் பார்த்துள்ளனர்.

இவர் விஜய் ரசிகையா

இவர் விஜய் ரசிகையா

அஜித்தின் மகள் அனோஷ்கா, விஜய்யின் தீவிர ரசிகையாம். அதனால் தான் தியேட்டருக்கே போய் படத்தை பார்த்துள்ளாராம். அஜித் குடும்பத்தினர் பீஸ்ட் படத்தை பார்த்த தகவலை விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சேர்ந்து ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். அஜித் குடும்பத்தினரையும் அவர்கள் பாராட்டி வருகின்றனர்.

அஜித் எங்க இருக்கார்

அஜித் எங்க இருக்கார்

அஜித் தற்போது ஏகே 61 பட ஷுட்டிங்கிற்காக ஐதராபாத்தில் இருந்து வருகிறார். மூன்று மாதங்களில் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் போனி கபூர் கண்டிப்பாக சொல்லி விட்டதால், படத்தின் வேலைகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அஜித்தின் பிறந்த நாளான மே 1 ம் தேதி வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளாராம்.

Recommended Video

Beast Movie Review | பீஸ்ட் விமர்சனம் | Yessa ? Bussa ? | Vijay | Pooja | Nelson | Filmibeat Tamil
விஜய்யும் பிஸி தான்

விஜய்யும் பிஸி தான்

விஜய்யும் தற்போது தளபதி 66 படத்தின் வேலைகளில் பிஸியாகி விட்டாராம். தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஜுன் மாதம் வெளியிடப்படப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக பாடல் காட்சிகளில் ராஷ்மிகாவுடன் சேர்ந்து டூயட் பாட உள்ளார் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X