»   »  அஜித் ரசிகர்களே... உலக சாதனைக்குத் தயாரா?

அஜித் ரசிகர்களே... உலக சாதனைக்குத் தயாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பலத்த எதிர்பார்ப்போடு வெளிவந்த 'விவேகம்' படம் வெளிவந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டதால் படத்தைப் பற்றிய பேச்சுகள் குறைந்துவிட்டன. இந்நிலையில், விவேகம் ஒரு உலக சாதனைக்குத் தயாராகி வருகிறது.

மிகப் பெரும் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் அஜித் ரசிகர்களைக் கொஞ்சம் ஏமாற்றிவிட்டது. கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் படத்தின் வசூல் வார நாட்களை விட நன்றாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்த வாரத்திற்குள் பெரும்பாலான தியேட்டர்களில் இப்படம் தூக்கப்பட்டுவிடும். அந்த இடத்தை விஷாலின் 'துப்பறிவாளன்', ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' படங்கள் நிரப்பிவிடும்.

மாஸ் ஹிட் டீஸர் :

மாஸ் ஹிட் டீஸர் :

விவேகம் படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதில் படத்தின் டீஸருக்குப் பெரும் பங்கு உண்டு. யூ-ட்யூபில் மே மாதம் வெளியான இப்படத்தின் டீஸர் இதுவரை 2 கோடியே 3 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

செம்ம லைக்ஸ் :

செம்ம லைக்ஸ் :

'விவேகம்' டீஸருக்கு 5,54,000+ லைக்குகளும் கிடைத்துள்ளன. இன்னும் 17,000 லைக்குகள் மட்டும் கிடைத்தால் உலக அளவில் அதிக லைக்குகள் பெற்ற டீஸர் என்ற சாதனை புரிந்து நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புள்ளது.

இப்போது முதலிடத்தில் :

இப்போது முதலிடத்தில் :

'ஸ்டார் வார் 1 - தி லாஸ்ட் ஜெடி' டீஸர் 5,71,000 லைக்குகள் பெற்று தற்போது முதலிடத்தில் உள்ளது. இந்தச் சாதனையைக் கடக்க வேண்டுமானால் விவேகம் டீஸருக்கு இன்னும் 17000 லைக்குகள் கிடைத்தால் போதும்.

சாதனை படைக்குமா :

சாதனை படைக்குமா :

இந்திய அளவில் இப்போதைக்கு 'விவேகம்' டீஸர்தான் அதிக லைக்குகளைப் பெற்றிருக்கிறது. 'விவேகம்' படத்தின் பரபரப்பு மறைவதற்குள் அஜித் ரசிகர்கள் இன்னும் 17,000 லைக்குகளைச் செய்தால் ஒரு தமிழ்ப் படத்திற்கு, அதுவும் அஜித் படத்திற்கு உலக சாதனை புரியும் வாய்ப்பு கிடைக்கும்.

English summary
'Vivegam' teaser has got 5,54,000+ Likes. If it gets 17,000 more likes, it can create a record as world's highest liked teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil