என்னாது துணிவு படத்துக்கு ஆலோசனை கூட்டமா? நெல்லை ரசிகர்கள் பண்ண தரமான சம்பவம்.. பறக்கும் ட்ரோல்கள்!
சென்னை: துணிவு படத்துக்கு இப்படியொரு ப்ரோமோஷன் ஆலோசனைக் கூட்டத்தை நடிகர் அஜித்தோ, தயாரிப்பாளர் போனி கபூர் கூட பண்ணியிருக்க மாட்டார்கள்.
அந்த அளவுக்கு சிறப்பாக வரும் பொங்கலுக்கு படம் எப்படியாவது பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் களமிறங்கி உள்ள புகைப்படம் ஒன்று டிரெண்டாகி வருகிறது.
இதை வைத்து விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட ட்ரோல்களை சோஷியல் மீடியாவில் போட்டு வருகின்றனர்.

போட்டோ ப்ரோமோஷன்
சிறந்த படம் என்பது தன்னைத் தானே ப்ரோமோஷ செய்து கொள்ளும் என்றும் துணிவு படத்தின் ப்ரோமோஷனுக்கும் தான் வரமாட்டேன் என்பதை நாசுக்காக நடிகர் அஜித் சொல்லி விட்டார். ஆனால், டப்பிங் ஸ்டூடியோவில் அவர் டப்பிங் பேசும் காட்சிகள், கல்யாண் மாஸ்டர் கொரியோகிராபியில் நடனமாடும் போது நடனக் குழுவினர் உடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் என ஏகப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

சிஜி பாடலா
கல்யாண் மாஸ்டர் மற்றும் நடனக் கலைஞர்களுடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படத்திற்கு பின்னால் ப்ளூ ஸ்க்ரீன் உள்ள நிலையில், சில்லா சில்லா பாடல் சிஜி பாடலா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அனிருத் குரலில் பாடல் தாறுமாறாக அடுத்த "ஆலுமா டோலுமா" போல இருக்கும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

உதயநிதி அதிரடி
வாரிசு மற்றும் துணிவு என இரு படங்களுக்கும் சம அளவில் தியேட்டர் ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்படும் என்பதை துணிவு படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ஓப்பனாக சொல்லி விட்டார். இந்நிலையில், வரும் பொங்கலுக்கு பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்பது தெரிந்து விடும் என ரசிகர்கள் ட்விட்டர் சண்டை போட்டு வருகின்றனர்.

ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், நெல்லையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் சிலர் துணிவு படத்தின் வெளியீட்டை முன்னிட்டு என்னவெல்லாம் கொண்டாட்டங்கள் செய்து படத்தை மிகப்பெரிய வெற்றியடைய செய்யலாம் என ஆலோசனை கூட்டம் ஒன்றையே நடத்தி உள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

குவியும் ட்ரோல்
ப்ரோமோஷன் பண்ணல, ப்ரோமோஷன் வேண்டாம்னு சொல்லிட்டே இப்படி அனைத்து ரீதியிலும் துணிவு படத்தை ப்ரோமோஷன் பண்ணி வருகிறார்களே, இப்படி ஒரு ஆலோசனை கூட்டத்தை அஜித்தோ, போனி கபூரோ, இயக்குநர் ஹெச். வினோத்தோ கூட போட்டிருக்க மாட்டார்கள். யாருடா நீங்களாம் என விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











