இது உங்களுக்கு தேவையா...அஜித் ரசிகர்களிடம் வசமாக சிக்கிய ப்ளூசட்டை மாறன்

சென்னை : ஆரம்பத்தில் ரிலீசாகும் புதுப்படங்களை மட்டும் விமர்சித்து பிரபலமானார் ப்ளூசட்டை மாறன். ஆனால் பிறகு படங்களை மட்டுமல்ல அந்த படத்தில் நடித்திருப்பவர்களை பற்றியும் விமர்சிக்க துவங்கினர்.

Recommended Video

RJ Balaji | Blue Sattai Maran-க்கு சரியான பதிலடி! *Kollywood

ஆனால் இப்போதெல்லாம் எந்த பட அறிவிப்பு வந்தாலும் ட்வீட் போட்டு வருகிறார். இவரது விமர்சனங்களை எதிர்ப்பவர்களை விமர்சிப்பது தான் பலரையும் கடுப்பாக்கி உள்ளது. அதிலும் குறிப்பாக அஜித் ரசிகர்கள் இவர் மீது செம கோபத்தில் இருக்கிறார்கள்.

வலிமை படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்களுக்கும் ப்ளூசட்டை மாறனுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. அஜித் பற்றிய விமர்சனங்களுக்கு ப்ளூசட்டை மாறனை கண்டபடி திட்டியதை தாண்டி, தற்போது அவர் என்ன ட்வீட் போட்டாலும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பப்ளிசிட்டி பிடிக்காது போட்டோ மட்டும் வருமாம்

பப்ளிசிட்டி பிடிக்காது போட்டோ மட்டும் வருமாம்

வலிமை படத்தில் அஜித் டான்ஸ் ஆடியதை வைத்து அவரை பாடி சேமிங் செய்து விமர்சித்து ரசிகர்கள், பிரபலங்கள், நெட்டிசன்கள் என பலரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்ட ப்ளூசட்டை மாறன், தற்போது அஜித் ஐரோப்பாவில் பைக் ட்ரிப் சென்ற போன்ற போட்டோக்கள் வெளியானதையும் விமர்சித்தார். பப்ளிசிட்டி பிடிக்காதாம். ஆனால் வருடத்திற்கு 365 நாளும் போட்டோ வெளியிடுவாராம். அவரது பட ப்ரொமோஷன், ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு கூட போவதில்லை என இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ட்வீட் போட்டிருந்தார்.

அதுல உங்களுக்கு என்ன கஷ்டம்

அதுல உங்களுக்கு என்ன கஷ்டம்

இதை அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல பலரும் கடுமையாக எதிர்த்தனர். ஆடியோ விழாவிற்கு போறதும் போகாததும் அவருடைய விருப்பம். அதனால் உங்களுக்கு என்ன கஷ்டம். சாதாரணமான நாமே பக்கத்து ஊருக்கு போனா போட்டோ எடுத்து சோஷியல் மீடியா, வாட்அப் ஸ்டேட்டில் வைக்கிறோம். அவர் போடுவதற்கு என்ன என்று கூட கேள்வி கேட்டிருந்தனர்.

பயில்வான் ரங்கநாதனுக்கு அஜித்தின் பதில்

பயில்வான் ரங்கநாதனுக்கு அஜித்தின் பதில்

ஆனால் இன்று அஜித் பேசிய பழைய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூசட்டை மாறன், பயில்வான் ரங்கநாதனுக்கு, பில்லா ப்ரஸ் மீட்டில் அஜித் சொன்ன பதில் என குறிப்பிட்டு ட்வீட் போட்டுள்ளார். இந்த வீடியோவில் அஜித் பேசியதை வைத்து தற்போது ப்ளூசட்டை மாறனை அஜித் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

அப்பவே சூப்பரா சொன்ன அஜித்

அப்பவே சூப்பரா சொன்ன அஜித்

பில்லா ரிலீசுக்கு முன் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் அஜித், பொதுவாகவே நான் ரொம்ப ரிசர்வ்டு டைப். உங்களுக்கே தெரியும். நீங்கள் என்னுடன் நடித்துள்ளீர்கள். நான் அதிகம் பேசுவதில்லை என்பது உண்மை தான். ஆனால் பேசிக்காக நான் பிரைவேட் மனிதர்.எனக்கு தனிமை ரொம்ப பிடிக்கும். ஒரு படத்திற்கு பப்ளிசிட்டி அவசியம் தான். அதை நான் இல்லை என்று சொல்லவில்லை. அதையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கு. ரசிகர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்று மட்டும் தான். தயவு செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.

என்ன மனுஷன்யா இவரு

என்ன மனுஷன்யா இவரு

நேரம் விலைமதிப்பிலாதது. வயது இருக்கு, வாலிபம் இருக்கு. அதை பயன்படுத்துங்க. நான் எனது ரசிகர்கள் நேசிக்கிறேன். நான் கொடுத்த ஃபிளாப் வேறு யாராவது கொடுத்திருந்தால் இந்நேரம் காணாமல் போய் இருப்பார்கள். ஒரு ப்ரஸ்மீட் என்றதும் நம்பிக்கையோடு வர்றீங்க. அதுக்கு காரணம் என்னுடைய ஃபேன்ஸ். அவங்க காட்டுற ஆதரவு, அன்பிற்கும் முன் மற்ற எதுவும் ஒன்றுமே இல்லை என பேசி உள்ளார்.

வசமா வந்து சிக்கிட்டாரே

வசமா வந்து சிக்கிட்டாரே

இந்த வீடியோவை குறிப்பிட்டு, இது அவருக்கு கொடுத்த பதில் இல்லை. இதுல இருக்குறது உங்களுக்கு தான் சொல்லிருக்கார். அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு. இன்னிக்கு ட்வீட் போடுறதுக்கு கூட அஜித் தான் உங்களுக்கு தேவைப்படுறார். அவர் வீடியோ தான் தேவைப்படுது. இப்படி வழிய வந்து வசமா சிக்கிருக்கீங்களே. இப்படி தான் பொழப்பு ஓடிட்டி இருக்கு என நெட்டிசன்களும், ரசிகர்களும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X