Don't Miss!
- News
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர் தண்ணீர் தொட்டியில் ஊழியர் மரணம்.. 7 நாட்களாக கிடந்த சடலம்
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஹோமில் தங்கி படிக்கும் 150 குழந்தைகள் உற்சாகம்... அஜித் ரசிகர்கள் என்ன செஞ்சாங்க பாருங்க!
புதுச்சேரி : நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசான படம் வலிமை.
Recommended Video
இந்தப் படம் மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.
இந்நிலையில் அஜித் ரசிகர்களும் தங்களது பங்கிற்கு தொடர்ந்து பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.
பிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்கும் டிடி... இயக்குநர் யார் தெரியுமா ?

வலிமை படம்
நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் வலிமை. இந்தப் படத்தில் காவல் உயரதிகாரி வேடத்தில் அஜித் நடித்துள்ளார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

100 கோடி கிளப்பில் இணைந்த வலிமை
உலகளவில் 4000 திரையரங்குகளில் ரிலீசான வலிமை, மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. படத்தில் ஆக்ஷன் மற்றும் பைக் சண்டை காட்சிகள் அதிகமாக காணப்படுகிறது. இது சிலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் திரைக்கதை இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

வசூல் வேட்டையில் வலிமை
ஆயினும் தொடர்ந்து வசூல் வேட்டையை வலிமை நிகழ்த்தி வருகிறது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அமர்க்களப்படுத்தினர். தொடர்ந்து பேமிலி ஆடியன்சையும் கவர்ந்து படம் ஓடி வருகிறது.

போனி கபூர் குஷி
படம் வெற்றியா தோல்வியா என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். படம் அதிரி புதிரி வெற்றி என்று குறிப்பிட்டுள்ள அவர், ரசிகர்களின் இதயத்தில் படம் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். படம் பார்க்காதவர்கள் உடனடியாக அருகிலுள்ள திரையரங்கில் டிக்கெட் புக் செய்யவும் கேட்டுக் கொண்டார்.

வலிமை படத்தை பார்த்த ஹோம் குழந்தைகள்
இந்நிலையில் புதுச்சேரியில் ஹோமில் தங்கி படிக்கும் 150 குழந்தைகளை அஜித் ரசிகர்கள் வலிமை படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கும்படி செய்துள்ளனர். அவர்களுக்காக சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர். புதுச்சேரியில் வலிமை படம் 15 திரையரங்குகளில் ஓடி வருகிறது.

அஜித் ரசிகர்கள் சிறப்பு
புதுச்சேரியின் ஜாலி ஹோமில் தங்கி நரிக்குறவர் இன குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களை ஷண்முகா திரையரங்கில் படம் பார்க்க புதுச்சேரி பிரெஞ்ச் சிட்டி அஜித் ரசிகர்கள் அழைத்து சென்றனர். குழந்தைகளும் ஆர்வத்துடன் சென்று படத்தை பார்த்தனர். ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் தர்ஷா என்ற அஜித் ரசிகர் இதற்கான முழு செலவையும் ஏற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படம்
3 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் திரையரங்குக்கு சென்று திரைப்படம் பார்த்துள்ளதாகவும் பைக் சாகச காட்சிகள் மிகவும் பிடித்திருந்ததாகவும் குழந்தைகள் தெரிவித்துள்ளனர். பலர் முதல்முறையாக திரையரங்கை பார்த்ததாகவும் தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திரையரங்குகளுக்கு சென்று பாலபிஷேகம் உள்ளிட்டவற்றை செய்வதை காட்டிலும் இத்தகைய சம்பவங்கள் கண்டிப்பாக பாராட்டிற்கு உள்ளானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.