»   »  என்னத்த தீபாவளி, என்னத்த கொண்டாட: நமத்துப் போயிருக்கும் 'தல' ரசிகர்கள்

என்னத்த தீபாவளி, என்னத்த கொண்டாட: நமத்துப் போயிருக்கும் 'தல' ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல ரசிகர்கள் இந்த தீபாவளியை துக்க தீபாவளியாக கருதுகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை தீபாவளி, பொங்கல் ஆகியவை தான் இரண்டு முக்கிய பண்டிகைகள் ஆகும். தீபாவளி, பொங்கல் வந்தால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் ரிலீஸாக வேண்டும் என்று விரும்புவார்கள்.

இந்நிலையில் இந்த தீபாவளிக்கு கொடி, காஷ்மோரா ஆகிய இரண்டே படங்கள் தான் வெளியாகின்றன.

தல ரசிகர்கள்

தல ரசிகர்கள்

அஜீத் சிவா இயக்கத்தில் தல 57 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு நிச்சயம் வராது என்று ரசிகர்களுக்கு தெரியும். இருப்பினும் ஒரு டீஸர் அல்லது ட்ரெய்லராவது வெளியிட மாட்டார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

டீஸர்

டீஸர்

தீபாவளிக்கு அஜீத் நடித்து வரும் படத்தின் டீஸர் அல்லது ட்ரெய்லர் வெளியாக வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தல ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

என்னத்த தீபாவளி

என்னத்த தீபாவளி

தல படம் இல்லாததால் அஜீத் ரசிகர்கள் இந்த தீபாவளியை துக்க தீபாவளியாக கருதி போஸ்டர் கூட ஒட்டியுள்ளனர். தல படம் வராத திரை அரங்கு எங்களுக்கு சிறை அரங்கு. தல படம் வரும் நாளே எங்களுக்கு விடுதலை தீபாவளி என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

வீரம்

வீரம்

கடந்த ஆண்டு தல ரசிகர்கள் வேதாளம் படத்தோடு தீபாவளி கொண்டாடினார்கள். 2014ம் ஆண்டு அஜீத் ரசிகர்களுக்கு வீரம் படத்தோடு தல பொங்கலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ajith fans are unhappy as there is no special teaser or trailer release of his upcoming movie Thala 57 ahead of Diwali.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos