Don't Miss!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- News
அரசுப் பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்யும் அவலம்.. அமைச்சர் என்ன செய்கிறார்?- அண்ணாமலை தாக்கு!
- Finance
அடுத்த அதிரடி.. அதானி குழுமம் வாங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் கேட்கிறது ஆர்பிஐ..!!
- Lifestyle
இரத்த அழுத்தம் & இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த உணவுகள் போதுமாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அஜித் பிறந்தநாள் மே 1 இல்லையா? புயலை கிளப்பிய அன்பே ஆருயிரே நடிகை போட்ட ட்வீட்.. என்ன நடக்குது?
சென்னை: அன்பே ஆருயிரே படத்தில் நடித்த நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா இன்று அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மே 1ம் தேதி தான் நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என பல ஆண்டுகளாக ரசிகர்களும் பிரபலங்களும் கொண்டாடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை மீரா சோப்ரா போட்டுள்ள வாழ்த்து ட்வீட் அஜித் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
தேங்க்யூப்பா...கலாய்த்த
ரசிகருக்கு
கூலாக
பதில்
சொன்ன
யோகிபாபு

அஜித் பிறந்தநாள் சர்ச்சை
மே 1ம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் விழா கொண்டாடும் போதே சில விஜய் ரசிகர்கள் அஜித்தின் உண்மையான பிறந்தநாள் மே 7ம் தேதி தான் என கடந்த ஒரு வாரமாக பழைய வாழ்த்து போஸ்டர்களை எல்லாம் போட்டு ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், பிரபல நடிகை ஒருவரே இப்படியொரு வாழ்த்து ட்வீட் போட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.

பகீர் கிளப்பிய மீரா சோப்ரா
இந்நிலையில், தற்போது நடிகை மீரா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் "Happy birthday #ajithkumar, one of the finest actors that we have. #HBDAjithkumar" என ட்வீட் போட்டு ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் கடுப்பில் ஆழ்த்தி உள்ளார். சில விஜய் ரசிகர்களின் ட்வீட்டை பார்த்து அவர் இப்படி போட்டுள்ளாரா? அல்லது உண்மையிலேயே அஜித்தின் பிறந்தநாள் மே 7ம் தேதிதானா? என்கிற சந்தேகத்தை நெட்டிசன்கள் கிளப்பி உள்ளனர்.

யார் இந்த மீரா சோப்ரா
எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜகன்மோகினி, இசை, கில்லாடி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நிலா எனும் பெயரில் நடித்துள்ளார் நடிகை மீரா சோப்ரா. இப்படி திடீரென நடிகர் அஜித்துக்கு அவர் மே 7ம் தேதியான இன்று பிறந்தநாள் வாழ்த்து சொல்ல என்ன காரணம் என பல கேள்விகள் கிளம்பி உள்ளன.

இதோ ஆதாரம்
1971ம் ஆண்டு மே 5ம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாள் என்பதற்கான அரசு ஆவணங்களை நடிகை நிலாவின் ட்வீட்டுக்கு கீழ் ரசிகர்கள் ஷேர் செய்து மே 1ம் தேதி தான் அஜித்தின் பிறந்தநாள். மே 7ம் தேதி இல்லை என அவரை விளாசி வருகின்றனர். அந்த ட்வீட்டுக்கு கீழ் விஜய் ரசிகர்கள் இதுதான் உண்மையான பிறந்தநாள் என சண்டை இழுத்து வருகின்றனர்.

நிலாவை விளாசும் ரசிகர்கள்
நடிகை மீரா சோப்ரா இப்படியொரு வாழ்த்து ட்வீட் போட்டிருப்பதை பார்த்த அஜித் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர். நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி தான் அதில் எந்த மாற்றமும் இல்லை, தேவையில்லாமல் எங்களின் கோபத்துக்கு ஆளாகாதீங்க என கண்டித்து வருகின்றனர்.