Don't Miss!
- Lifestyle
இந்த 6 சூப்பர் உணவுகள் ஆண்-பெண் இருவரின் கருவுறுதலையும் அதிகரித்து விரைவில் பெற்றோராக உதவுமாம்...!
- Finance
சீனாவை ஆட்டி படைத்த சவால்கள்.. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு.. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கவலை!
- Technology
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- News
சர்ச்சைக்குரிய சேது சமுத்திரத் திட்டம் - அரசாங்க உண்மைகளை புட்டுப் புட்டு வைத்த டி.ஆர்.பாலு!
- Sports
சூர்யகுமாரின் பலவீனம் இதுதான்.. அதை சரி செய்தே தீர வேண்டும்.. தினேஷ் கார்த்திக் அட்வைஸ்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Automobiles
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
வலிமை தோல்விக்கு அப்டேட் கொடுத்தது தான் காரணம்.. துணிவு கதை ட்ரெய்லரிலேயே இருக்கு - ஹெச். வினோத்!
சென்னை: துணிவு படம் வரும் ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ள நிலையில், கலைஞர் டிவி, யூடியூப் சேனல் என ப்ரமோஷனை தீவிரப்படுத்தி உள்ளார் இயக்குநர் ஹெச். வினோத்.
இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் ஹீரோயின் மஞ்சு வாரியர் தொடர்ந்து பேட்டி அளித்து வரும் நிலையில், அஜித் ரசிகர்களுக்கு துணிவு படத்தை பற்றிய ஏகப்பட்ட அப்டேட்கள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், வலிமை படத்தின் தோல்விக்கு காரணமே அதிக அப்டேட்கள் கொடுத்தது தான் காரணம் என இயக்குநர் ஹெச். வினோத் பேட்டி ஒன்றில் பேசியுள்ளது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
துணிவு திரைப்படம் ரிலீஸாவதில் திடீர் சிக்கல்... ஷாக்கான அஜித் ரசிகர்கள்... இதுதான் காரணமா?

துணிவு கதை
துணிவு படத்தின் ட்ரெய்லரில் காட்டிய கதைக்கும் படத்துக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கும் என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், துணிவு படத்தின் கதை ட்ரெய்லரிலேயே காட்டி உள்ளோம் என இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு தொல்லை கொடுப்பது ஏகப்பட்ட சிக்கலை உருவாக்கி விடுகிறது என்றும் பேசினார்.

அப்டேட் கேட்டு தொல்லை
ஒரு படத்துக்கு ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள், பாடல்கள் உள்ளிட்டவற்றை தான் அப்டேட்களாக கொடுக்க முடியும். படம் ஆரம்பித்ததில் இருந்தே அப்டேட் வேண்டும் அப்டேட் வேண்டும் என ரசிகர்கள் கேட்டு நச்சரிப்பது பெரிய நடிகர்கள் படங்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. அதன் காரணமாக பல சிக்கல்களை படக்குழுவினர் சந்திக்கின்றனர் என்றார்.

வலிமை தோல்விக்கு காரணம்
இந்த அப்டேட்கள் எல்லாம் முடிந்த பின்னர் படத்தின் காட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி வெட்டி போட வேண்டிய சூழல் உருவாகிறது. அதன் பின்னர் தியேட்டரில் படத்தை பார்த்து விட்டு ஏற்கனவே பார்த்தது போல இருக்கிறது என சொல்லிட்டு போயிடுறாங்க.. வலிமை படத்தின் தோல்விக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக அந்த அப்டேட் விஷயம் அமைந்து விட்டதாக ஹெச். வினோத் பேசி உள்ளார்.

இல்லைன்னா மட்டும்
வலிமை படத்துக்கு பல மாதங்களாக நடிகர்கள், நடிகைகள் யார் என்கிற அப்டேட் கூட கொடுக்காமல் விட்டதனால் தான் ரசிகர்கள் அப்டேட் கேட்டனர். அப்டேட் கொடுக்காமல் டைரக்ட்டா படத்தை ரிலீஸ் பண்ணியிருந்தா மட்டும் அந்த படம் அப்படியே ஓடியிருக்கும் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ரசிகர்களின் ஈகோ
இந்த படம் மங்காத்தா மாதிரி இருக்கும் பில்லா மாதிரி இருக்கும் என எதிர்பார்கக் ஆரம்பிச்சிடுறாங்க.. பெரிய ஹீரோக்கள் படங்களை பண்ணும் போது இப்படிப்பட்ட ரசிகர்களின் ஈகோ, மார்க்கெட் ஈகோ என பல விஷயங்களை தாண்டி வர வேண்டிய சூழலுக்கு படைப்பாளிகள் தள்ளப்படுகின்றனர் என்றும் இயக்குநர் ஹெச். வினோத் தனது மன வேதனை கொட்டித் தீர்த்துள்ளார்.

எதிர்பார்க்காம வாங்க
மஞ்சு வாரியர் பேசும் போது அஜித் தான் வாட்டர் பைக் ஓட்ட கத்துக் கொடுத்தார். வெட்கமே இல்லாமல் அவரிடம் தான் கேட்டுக் கற்றுக் கொண்டேன் என பேசினார். மேலும், படத்தை ரொம்ப எதிர்பார்த்து நீங்களா ஒரு கற்பனை பண்ணிக்கிட்டு வராதீங்க.. ஜாலியா வந்து பாருங்க கண்டிப்பா என்ஜாய் பண்ணுவீங்க என பேசி உள்ளார்.