வலிமையை கண்டுகொள்ளாத யுவன்...கோபத்தில் ரசிகர்கள்...என்ன தான் பிரச்சனை?

சென்னை : வலிமை படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர்ராஜா, படத்தின் ரிலீஸ் ட்விட்டரில் ஒரு வார்த்தை கூட பேசாமல், அதை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதால் அஜித் ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்களாம்.

Recommended Video

ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்த வலிமை திரைப்படம்

நீண்ட காத்திருப்பிற்கு பிறகு அஜித்தின் வலிமை படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது. மிக பிரம்மாண்டமாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய போனி கபூர் திட்டமிட்டிருந்தார். ஆனால் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன், திருவிழா போல் வலிமை ரிலீசை கொண்டாடி உள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த கொண்டாட்டத்தை பார்த்து இந்திய சினிமாவே மிரண்டு போய் உள்ளது.

தீவிர ப்ரொமோஷன் வேலைகள்

தீவிர ப்ரொமோஷன் வேலைகள்

படத்திற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. பெங்களூரு, ஐதராபாத் என முக்கிய நகரங்களில் வலிமை ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. வழக்கம் போல அஜித் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தயாரிப்பாளர் போனி கபூர், ஹீரோயின் ஹுமா குரேஷி, வில்லன் கார்த்திகேயா என மற்ற பிரபலங்கள் மீடியாக்களில் பேட்டி அளித்து வருகின்றனர்.

வலிமையை கண்டு கொள்ளாத யுவன்

வலிமையை கண்டு கொள்ளாத யுவன்

போனி கபூரின் வற்புறுத்தலின் பேரிலேயே டைரக்டர் ஹெச்.வினோத் கலந்து கொண்டு வருகிறார். போனி கபூர், வினோத், கார்த்திகேயா, ஹுமா குரேஷி ஆகியோர் சென்னையில் ரசிகர்களுடன் சென்று படம் பார்த்து, சந்தோஷத்தை கொண்டாடி உள்ளனர். ஆனால் வலிமை படத்திற்கு பாடல்கள் இசையமைத்திருக்கும் யுவன் படத்தை பற்றி தற்போது ஒரு ட்விட் கூட போடவில்லை.

இதுலயும் கலந்து கொள்ளவில்லையா

இதுலயும் கலந்து கொள்ளவில்லையா

பைனல் சவுண்ட் மிக்சிங் பணிகளில் கூட யுவன் ஷங்கர் ராஜா பங்கேற்கவில்லை என சவுண்ட் டிசைனர் ராஜா கிருஷ்ணன் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். ஜிப்ரான் தான் அந்த பணிகளில் அவருடன் இருந்திருக்கிறார். யுவன், அஜித்துக்கு இதற்கு முன்பு ஏழு படங்களில் இசையமைத்துள்ளார். ஆரம்பம், பில்லா, மங்காத்தா என பல படங்களில் இசை பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது எட்டாவது முறையாக வலிமை படத்தில் யுவன் - அஜித் கூட்டணி சேர்ந்தது.

கோபத்தில் அஜித் ரசிகர்கள்

கோபத்தில் அஜித் ரசிகர்கள்

அதனால் தான் டீசர், டிரைலர் வெளியீட்டு சமயங்களில் கூட யுவன் பெரிதாக ஆர்வம் காட்டவில்லையாம். தற்போது படத்தின் ரிலீஸ் நேரத்தில் கூட ஒரு வார்த்தை கூட ட்விட்டரில் பதிவிடாததால் யுவன் மீது அஜித் ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X