»   »  தரமணியை வரவேற்கும் தல ரசிகர்கள்... ஜேஎஸ்கே ஹேப்பி அண்ணாச்சி! #Taramani

தரமணியை வரவேற்கும் தல ரசிகர்கள்... ஜேஎஸ்கே ஹேப்பி அண்ணாச்சி! #Taramani

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக தங்கள் அபிமான நடிகர் படம் வெளியாகும் நாளில் வேறொரு படமும் போட்டிக்கு வந்தால், ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். கொந்தளிப்பார்கள் அல்லது மட்டம் தட்டுவார்கள்.

ஆனால் தரமணி விஷயத்தில் அப்படியே தலைகீழ். வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி தல அஜித்தின் விவேகமும் வெளியாகிறது. இதுவரை தேதியில் மாற்றமில்லை.

Ajith fans welcome Taramani

இன்று தரமணி ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11 என அறிவிக்கப்பட்டது. விவேகம் படத்துடன் போட்டியா என்றெல்லாம் யோசிக்காமல், அஜித்தின் ரசிகர்கள் தரமணிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத் தளங்களில் தரமணிக்கு வரவேற்பு தெரிவித்து அஜித் ரசிகர்கள் ட்விட்களையும் பதிவுகளையும் போட்டு வருகின்றனர்.

தரமணி தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமாருக்கு இது பெரிய மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுத்துள்ளது. "இதுதான் ஆரோக்கிய சினிமாவுக்கான சூழல்.. ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தத் தலைமுறை ரசிகர்கள் பக்குவப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக தல ரசிகர்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்," என்கிறார் ஜேஎஸ்கே.

இயக்குநர் ராமின் மூன்றாவது படைப்பான தரமணியில் வசந்த் ரவி நாயகனாக அறிமுகமாகிறார். ஆன்ட்ரியா, அஞ்சலி நாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

English summary
Thala Ajith's fans welcoming the release of Director Ram's Taramani that is clashing with Ajith's Vivegam on Aug 11th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil