»   »  இணையத்தில் இப்போதிலிருந்தே 'ஓட்டப்படும்' வேதாளம் டீசர்... கவலையில் அஜீத் ரசிகர்கள்!

இணையத்தில் இப்போதிலிருந்தே 'ஓட்டப்படும்' வேதாளம் டீசர்... கவலையில் அஜீத் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேதாளம் முதல் பார்வை குறும் காணொளி (அதாங்க ஃபர்ஸ்ட் லுக் டீசர்) நேற்று நள்ளிரவு ஒருவழியாக வெளியானது.

இந்த டீசருக்கு பொது மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் கலவையான விமர்சனம், அஜீத் ரசிகர்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

Ajith fans worry about criticisms on Vedalam teaser

'இந்த டீசரில் அஜீத் என்ன பேசுகிறார் என்பது புரிய, குறைந்தது பத்து முறையாவது ரிபீட்டடிக்க வேண்டியுள்ளது. அதிலும் ஆரம்பத்தில் அவர் உச்சரிப்பது என்ன ஒலி என்றே தெரியவில்லை. ஓ என்கிறாரா.. வேறு ஏதாவது ஒலியா அது.. தெரியலியேப்பா' என சிலர் கமெண்ட் அடித்துள்ளனர்.

"புலி படத்தில் வேதாளமாக வரும் விஜய் வாயைத் திறந்து தனது ஸ்பெஷல் பற்களைக் காட்டி பயமுறுத்துவதற்கு நிகராக, வேதாளம் படத்தில் அஜீத்தும் வாயைத் திறந்து காட்டுகிறார்.. யம்மாடி" என சிலர் கிண்டலடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஒருவருக்கு இரு கதாநாயகிகள் (ஸ்ருதி ஹாஸன், லட்சுமி மேனன்) இருந்தும், யாரையும் டீசரில் காட்டவில்லையே... என்று சிலரும், வேதாளம் படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியுமா என்று சிலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"இது சின்ன டீசர்தான். இதிலேயே எல்லாவற்றையும் காட்டிவிட முடியுமா... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... வேதாளம் அதகளம் பண்ணும்," என்று அஜீத் ரசிகர்கள் சமாளித்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் சமூக வலைத் தளங்களில், விஜய்யின் புலிக்கு இணையாக வேதாளத்தையும் கலாய்த்து கேலி ஒப்பீடுகளை (Memes) உருவாக்கி கலங்கடித்து வருகிறார்கள் இணைய பாவனையாளர்கள்!

    English summary
    Numerous social network users created memes against Ajith's recently released Vedalam teaser.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil