»   »  விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அஜீத்

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்திற்கு அஜீத் நேற்று சென்றுள்ளார். அஜீத் வரும் விஷயம் அறிந்து மாணவர்கள் உள்பட பலர் அவரை காண காத்திருந்தனர்.

அஜீத்தை பார்க்க மணிக்கணக்கில் காத்திருந்திருக்கின்றனர்.

புகைப்படம்

புகைப்படம்

அஜீத்தை பார்த்த மாணவர்கள் உற்சாகமாகி அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

ஃபேஸ்புக்

அஜீத்தை காண லட்சக்கணக்கானோர் காத்துள்ளனர். ஆனால் தளபதி ரசிகனான எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் பேசினேன், கை குலுக்கினேன். அவர் டயர்டாக இருந்தாலும் லேட் நைட் ஆனபோதிலும் எங்களுடன் புகைப்படம் எடுக்க சம்மதித்தார். 12 மணிநேரமாக காத்திருக்கிறோம் சார் என்றோம். அதற்கு அவரோ சாரி பா, நான் 26 ஆண்டுகளாக காத்திருக்கிறேன் என்றார் என விஜய் ரசிகர் ஒருவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

எதற்கு?

எதற்கு?

குவாட்காப்டர் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள அஜீத் எம்.ஐ.டி. சென்றாராம். வாழும் வரை ஏதாவது புதிதாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அவர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

அஜீத்தின் செயலால் தல ரசிகர்கள் மட்டும் அல்ல தளபதி ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். தளபதி ரசிகர்களாக இருந்தாலும் எங்களுக்கு தலயை பிடிக்கும் என்று கூறி வருகிறார்கள்.

English summary
Ajith has impressed Vijay fans by his kind gesture. Ajith visited MIT and agreed to take pictures with fans who waited for him there for hours.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X