வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு போட்டியாக அஜித் செய்த சம்பவம்… இப்பவே பொங்கல் ரேஸ் ஆரம்பம்…

சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசும் மோத காத்திருக்கிறது.

இந்நிலையில், விஜய்யின் வாரிசு படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியான வேகத்தில், அஜித்தின் துனிவு படத்தில் இருந்தும் அப்டேட் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் ரேஸில் துணிவு

பொங்கல் ரேஸில் துணிவு

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. ஹெச் வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், துணிவு இறுதிக்கட்ட பணிகளில் வேகமாக உள்ள படக்குழு, விரைவில் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதனிடையே அஜித்தின் பைக் டூர் புகைப்படங்களும், ரசிகர்களுடன் எடுத்துகொண்ட போட்டோக்களும் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. இதுவே துணிவு படத்திற்கு ப்ரோமோஷனாக அமைந்து வருகிறது.

வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ

வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ

அஜித்தின் துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளது. இந்நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவை படக்குழு நேற்று வெளியிட்டது. விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே என்ற அந்தப் பாடல், நாளை வெளியாகவுள்ளது. இதனால், சோஷியல் மீடியாஸ் முழுவதும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ ட்ரெண்டாகி வரும் நிலையில், அஜித்தின் துணிவு படத்தில் இருந்தும் தரமான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, துணிவு படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உற்சாகமான அஜித் ரசிகர்கள்

உற்சாகமான அஜித் ரசிகர்கள்

இதனால், அஜித் ரசிகர்கள் தற்போது செம்ம உற்சாகமாக காணப்படுகின்றனர். ஏற்கனவே துணிவு நாயகி மஞ்சு வாரியர் உள்ளிட்ட மேலும் சில நடிகர்கள் வாரிசு டப்பிங் பணிகளை முடித்துவிட்டனர். இப்போது அஜித்தும் டப்பிங்கை முடித்துவிட்டதால், வாரிசுக்கு டஃப் கொடுக்கும் வகையில் துணிவு பட அப்டேட்டும் வைரலாகி வருகிறது. மேலும், விரைவில் துணிவு டீசர் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் பற்றி படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் - விஜய் நேருக்கு நேர் மோதிக்கொள்ளவுள்ளதால் கோலிவுட்டே பரபரப்பாக காணப்படுகிறது.

ப்ரோமோஷனுக்கு நோ சொன்ன அஜித்

ப்ரோமோஷனுக்கு நோ சொன்ன அஜித்

முன்னதாக துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து உடனடியாக அஜித்தின் தரப்பில் இருந்து பதில் வந்தது. இதுகுறித்து ட்வீட் செய்திருந்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, "ஒரு நல்ல படம் தன்னை தானே ப்ரோமோஷன் செய்துகொள்ளும்" என ஸ்மார்ட்டாக பதில் தெரிவித்திருந்தார். இதனால், துணிவு பட ப்ரோமோஷனுக்கு அஜித் வருவார் என்ற செய்திகள் பொய்யாகிவிட்டன. இந்நிலையில், துணிவு டப்பிங்கை அஜித் முடித்துவிட்டது, ரசிகர்களிடம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X