அஜித் பிரசன்ஸ் அப்டி இருக்கும்! விஜய் கூட இப்ப டிஸ்டன்ஸ் இருக்கு... உதயநிதி பளிச் பேட்டி

சென்னை: அரசியலில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற பிறகு உதயநிதி அவர்கள் நடிப்பதை சற்று குறைத்துள்ளார்.

மாமன்னன் திரைப்படம் அவர் நடிக்கும் கடைசி படம் என்று சொல்லப்பட்ட நிலையில் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் அவர் கதாநாயகனாக நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் இந்த

கலகத் தலைவன்

கலகத் தலைவன்

படம் ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நாட்கள நாட்களாக தலைப்பை இயக்குநர் மகிழ் திருமேனி கூறவில்லையாம். பின்னர் ஒரு நாள் கலகத் தலைவன் என்று கூறியபோது அதற்கு உதயநிதி சாம்மதிக்கவில்லையாம். அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழும் என்று உதயநிதி தயங்கியபோது கலகம் செய்யும் தலைவன் என்ற பொருளில்தான் வருகிறது என்று மகிழ் திருமேனி கூற, முதலில் எனக்கு தலைப்பின் எழுத்துக்களை காட்டுங்கள், ல-விற்கு பதிலாக ழ இருந்தால், நான் சம்மதிக்க மாட்டேன் என்று கூறினாராம். பின்னர் கலகத் தலைவன் என்கிற தலைப்பை பார்த்த பின்னர்தான் உதயநிதி சம்மதித்தாராம்.

விநியோகம்

விநியோகம்

ரெட் ஜெயிண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் உதயநிதி திரைப்படங்களை விநியோகிக்க ஆரம்பித்த பின் கணக்குகள் சரியாக வருவதாக திரைத் துறையைச் சேர்ந்த பலரும் கூறுகின்றனர். குறிப்பாக விக்ரம் திரைப்படத்தின் மிகப் பெரிய லாபம் கமல் ஹாசனிடம் சென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் உதயநிதி. கடந்த வாரம் வெளியான லவ் டுடே மற்றும் காஃபி வித் காதல் திரைப்படங்களையும் உதயநிதிதான் விநியோகம் செய்திருந்தார்.

ஒரே கேள்வி

ஒரே கேள்வி

கலகத் தலைவன் திரைப்படத்தின் புரமோஷனுகாக பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி. ஆனால் சொல்லி வைத்தார் போல அனைத்து பேட்டிகளிலும் அவரிடம் கேட்கப்படும் முக்கியமான கேள்வி துணிவு திரைப்படம் எப்போது வருகிறது என்பதுதான். காரணம் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்தை உதயநிதிதான் விநியோகம் செய்கிறார். பொங்கலன்று துணிவு கண்டிப்பாக வெளியாகும் என்று உதயநிதி பதிலளித்துள்ளார்.

பிரசன்ஸ்

பிரசன்ஸ்

நீங்கள் விஜய் ரசிகராக இருந்தவர், அவரை வைத்து படம் கூட தயாரித்தார்கள். அதுபோல அஜித்துடன் நட்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அஜித்துடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆனால் எனது தம்பி தயாநிதியின் திருமணத்தில் அஜித் நீண்ட நேரம் கலந்து கொண்டார். காரணம், மங்காத்தா திரைப்படத்தை தயாநிதிதான் தயாரித்திருந்தார். அப்போது அவருடன் நேரம் செலவிட முடிந்தது. அவருடைய அந்த பிரசன்ஸ்தான் என்னை வியக்க வைத்தது. விஜய்யுடன் தற்சமயம் சற்று விலகி இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் உதயநிதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X