twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜீத் ரசிகர்களே.. உங்க ஆட்டத்துல இது புது ரகமாவுல்ல இருக்கு..!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : சிவா, அஜித் கூட்டணியில் உருவாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் 'விவேகம்'. இந்தப் படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகயிருக்கிறது.

    அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தில், அஜித்தை இன்டர்நேஷனல் லெவலில் மாஸ் ஹீரோவாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சிவா. இந்தப் படத்தில் அஜித் ரா ஏஜென்ட்டாக நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    சிலை மோகம் :

    சிலை மோகம் :

    அஜித் ரசிகர்கள் உற்சாகமாக 'விவேகம்' படத்தைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் அஜித்தின் மீது வைத்திருக்கும் அலாதி பிரியத்தால் அவரது ரசிகர்கள் கும்பகோணத்தில் அஜித்துக்காகச் சிலை திறந்தனர். விஜய் ரசிகர்களும் சில நாட்களுக்கு முன்பு சிலை நிறுவியது குறிப்பிடத்தக்கது.

     அஜித் இட்லி :

    அஜித் இட்லி :

    இந்நிலையில் தற்போது, வடசென்னையில் உள்ள வீர சென்னை அஜித் நண்பர்கள் சார்பாக அஜித்தின் உருவத்தில் 57 கிலோ எடை கொண்ட இட்லியை உருவாக்கியிருக்கிறார்கள். 'விவேகம்' அஜித்தின் 57-வது படம். எனவே, இப்படி வித்தியாசமாக இட்லி செய்ய முடிவெடுத்தார்களாம்.

    பொதுமக்களின் பார்வைக்கு :

    பொதுமக்களின் பார்வைக்கு :

    இந்த 57 கிலோ எடைகொண்ட அஜித் இட்லியை பொதுமக்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் பார்ப்பதற்காக பாரத் திரையரங்க முகப்பில் வைக்க இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி அஜித்தின் வீட்டுக்கும் எடுத்து செல்லலாம் என்ற எண்ணமும் உள்ளதாம்.

    வேர்ல்டுலயே ஃபர்ஸ்ட் :

    வேர்ல்டுலயே ஃபர்ஸ்ட் :

    இந்த இட்லியை இனியவன் எனும் அஜித் ரசிகர் உருவாக்கியிருக்கிறார். இதுவரை எந்தத் தமிழ் நடிகருக்கும் இதுமாதிரி இட்லி வடிவத்தில் அவர்களின் உருவத்தைப் பொறித்தது இல்லை. அவ்வளவு ஏன், உலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கக்கூடும்.

    குஷ்பு இட்லிக்குப் போட்டியா வந்துருச்சு! :

    குஷ்பு இட்லிக்குப் போட்டியா வந்துருச்சு! :

    பெரியதாக, மென்மையாக இருக்கும் 'குஷ்பூ இட்லி' தமிழகத்தின் பல இடங்களில் பரவலாகக் கிடைக்கும். இனிமேல், குஷ்பூ இட்லியைப் போல அஜித் இட்லியும் பேசப்படும் எனத் தெரிகிறது.

    English summary
    Ajith idly has been made by his north madras fans. It will be kept at Bharat Theater facade.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X