ஐரோப்பாவிற்கு பைக் ட்ரிப் போன அஜித்...ஏகே 61 ஷுட்டிங்கில் கலந்துக்கலையா ?

சென்னை : நடிகர் அஜித் ஐரோப்பாவில் பைக் ட்ரிப் சென்ற போட்டோக்கள் கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. அஜித் பைக் ட்ரிப் செல்வது ஒன்றும் புதிதல்ல. வழக்கமானது தான் என்றால் ஒவ்வொறு முறையும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகும் போதெல்லாம் அவை டிரெண்டிங் ஆகிறது.

அஜித் வலிமை படத்தில் நடித்து முடித்ததும் ரஷ்யாவில் நீண்ட பைக் டிரைவ் சென்றார். இதே போல் தற்போது ஐரோப்பாவில் சென்றுள்ளார். வலிமை படத்தின் போது சென்னை டூ கொல்கத்தாவிற்கும் பைக் ட்ரிப் போனார் அஜித்.

அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென் போன்ற பலர் நடித்து வருகின்றனர்.

47 நாட்கள் நடந்த ஷுட்டிங்

47 நாட்கள் நடந்த ஷுட்டிங்

முதல் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில், சென்னை மவுண்ட் ரோடு போன்று பிரம்மாண்ட செட் அமைத்து நடத்தப்பட்டது. 47 நாட்களாக இங்கு இரவு பகலாக நடத்தப்பட்ட ஷுட்டிங்கில் அஜித் மட்டுமே நடித்து வந்தார். பிறகு மவுண்ட் ரோடு செட்டில் அஜித்தும், சமுத்திரக்கனியும் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

புனேயில் 2ம் கட்ட ஷுட்டிங்

புனேயில் 2ம் கட்ட ஷுட்டிங்

நடிகர் வீரா முதல் ஆளாக ஏகே 61 படத்தில் தனது பகுதி ஷுட்டிங்கை முடித்தார். முதல் கட்ட ஷுட்டிங்கை முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பி ஏகே 61 டீம், இரண்டாம் கட்ட ஷுட்டிங்கிற்காக ஜுன் 15 ம் தேதி தான் புனே சென்றது. ஜுன் 15 ம் தேதி முதல் புனேயில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மஞ்சு வாரியர் விரைவில் இணைய உள்ளார்.

சாரி சொன்ன அஜித்

சாரி சொன்ன அஜித்

புனேயில் நடக்கும் ஏகே 61 ஷுட்டிங்கில் கலந்து கொள்வதற்காக அஜித்தும் இரண்டு நாட்களுக்கு முன் புறப்பட்டுச் சென்றார். அப்போது ஏர்போர்ட்டில் பெண் ஒருவர் செல்ஃபி எடுக்க வேண்டும் என அஜித்திடம் கேட்ட போது, நோ சென்ன அஜித், பிறகு நின்று அவரிடம் சாரி சொல்லி விட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ வெளியாகி செம வைரலானது.

ஷுட்டிங்கில் இல்லையா அஜித்

ஷுட்டிங்கில் இல்லையா அஜித்

ஏற்கனவே ஏகே 61 படத்தின் ஷுட்டிங் 80 சதவீதம் முடிந்து விட்டதாகவும், இன்னும் 10 முதல் 15 நாட்கள் வரையிலான ஷுட்டிங் மட்டுமே மீதமுள்ளதாகவும் கூறப்பட்டது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதால் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அஜித் ஐரோப்பாவில் பைக் ட்ரிப் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அப்படியானால் ஏகே 61 ஷுட்டிங்கில் அஜித் கலந்து கொள்ளவில்லையா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

அஜித் டூர் போனதுக்கு இதுதான் காரணமா

அஜித் டூர் போனதுக்கு இதுதான் காரணமா

ஆனால் லேட்டஸ்ட் தகவலின், அஜித் தான் நடிக்க வேண்டிய சீன்களின் ஷுட்டிங் அனைத்தையும் முடித்து விட்டாராம். மற்ற நடிகர்கள் நடிக்க வேண்டிய சீன்கள் தான் தற்போது எடுக்கப்பட்டு வருகிறதாம். அஜித் நடிக்க வேண்டியதில் ஒரு சில காட்சிகள் மட்டுமே மீதம் உள்ளதாம். ஐரோப்பா ட்ரீப் முடித்து திரும்பியதும், அந்த சீன்களில் நடித்து விட்டு, அஜித் டப்பிங் வேலைகளை துவக்க போகிறாராம்.

தீபாவளிக்கு தரமான சம்பவம் இருக்கு

தீபாவளிக்கு தரமான சம்பவம் இருக்கு

ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஏகே 61 ஷுட்டிங்கை முடிக்க ஹெச்.வினோத் திட்டமிட்டுள்ளாராம். ஜுலை - ஆகஸ்ட் மாத இறுதிக்குள் டப்பிங் வேலைகள் முடிக்கப்பட பிளான் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட உள்ளதாம். தீபாவளிக்கு தரமான சம்பவமாக ஏகே 61 படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

அடுத்த மாதம் டைட்டில் அப்டேட்

அடுத்த மாதம் டைட்டில் அப்டேட்

ஜுலை மாதத்தில் ஏகே 61 டைட்டிலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதைத் தொடர்ந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளுடன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை போனி கபூர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X