»   »  தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித்! டிவி சேனல் சர்வே ரிசல்ட்

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித்! டிவி சேனல் சர்வே ரிசல்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 1990களில் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக விளங்கியவர் யார் மற்றும் யார் உங்கள் அபிமான நடிகர் என்ற இரு கேள்விகளை கொண்டு, பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில், அஜித் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அவருக்கு பெரும் போட்டியாக பார்க்கப்படும், விஜய் ஒரு சர்வேயில் 2வது இடத்தையும், மற்றொன்றில் 3வது இடத்தையும் பிடித்துள்ளார்.

தமிழ் சேனல்

தமிழ் சேனல்

பிரபல தமிழ் செய்தி சேனல் ஒன்று, சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. 1990களில் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் (நடிப்பு, கெட்-அப் சேஞ்ச் உள்ளிட்ட அம்சங்கள்) யார் என்று ஒரு கேள்வியையும், உங்கள் அபிமான நடிகர் யார் என்ற கேள்வியையும், அந்த சேனல், பார்வையாளர்கள் முன் வைத்தது.

பெஸ்ட் நடிகர் அஜித்

பெஸ்ட் நடிகர் அஜித்

இதில் சிறந்த (பெஸ்ட்) நடிகர் யார் என்ற கேள்விக்கு 24 சதவீதம் மக்கள் அஜித் எனவும், 23 சதவீதம் மக்கள் விக்ரம் எனவும் பதிலளித்திருந்தனர். தலா 18 சதவீதம் மக்கள், விஜய் மற்றும் சூர்யாவை தேர்ந்தெடுத்தனர். எனவே அவர்கள் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பிரபுதேவா, அரவிந்த் சாமி

பிரபுதேவா, அரவிந்த் சாமி

இந்த கருத்துக்கணிப்பில் பிரபுதேவாவுக்கு 6 சதவீத மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. எனவே அவர் 4வது இடத்தை பிடித்துள்ளார். 5 சதவீத வாக்குகளுடன் அப்போதைய கனவு கண்ணன், அரவிந்த் சாமி, 6வது இடத்தையும், ஆணழகன் பிரசாந்த் 2 சதவீத வாக்குகளையும் பிடித்தனர். 4 சதவீத மக்கள் பிற நடிகர்கள் என்ற பிரிவுக்கு வாக்களித்திருந்தனர்.

ஃபேவரிட்டும் அஜித்தே

ஃபேவரிட்டும் அஜித்தே

மக்கள் மத்தியில் பிரபலமான (ஃபேவரிட்) நடிகர் யார் என்ற கேள்விக்கு, அஜித் என 30 சதவீதம் மக்களும், விஜய் என 27 சதவீதம் மக்களும் வாக்களித்துள்ளனர். எனவே இதில், விஜய் 2வது இடத்தை பிடித்தார். ஆனால், இரு பிரிவுகளிலுமே, அஜித் முதலிடத்தை தட்டிச் சென்றார்.

சூர்யாவுக்கு 3வது இடம்

சூர்யாவுக்கு 3வது இடம்

பிரபலமான நடிகர்கள் பட்டியலில், சூர்யாவுக்கு 18 சதவீத வாக்குகளும், பிரசாந்த்துக்கு 3 சதவீதம் வாக்குகளும் கிடைத்துள்ளன. பிற நடிகர்கள் என்ற பிரிவுக்கு 6 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு முடிவு வெளியானதும், அஜித் ரசிகர்கள், அதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர்.

தல-தளபதி டஃப் ஃபைட்

தல-தளபதி டஃப் ஃபைட்

பிரபல வார இதழ் ஒன்று, நடத்திய கருத்துக்கணிப்பில் நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் என தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் சூப்பர் ஸ்டார் பட்டம் பெறுவதற்கான விழாவை நடத்த அனுமதி கிடைக்கவில்லை. எனவே அந்த பட்டத்தை அவர் பெற முடியவில்லை. இந்நிலையில், டிவி கருத்துக்கணிப்பு அஜித்தை முன்னுக்கு நிறுத்தியுள்ளது. தல-தளபதி நடுவே, ரசிகர்களை ஈர்ப்பதில், கடும் போட்டி இருப்பது இக்கருத்து கணிப்புகளின் மூலம் தெரியவருகிறது. அதேநேரம், இது 1990களுக்கான கருத்துக் கணிப்பு என்பதால் விஜய் புகழுக்கு எந்த பின்னடைவும் இல்லை என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

English summary
Ajith is the best and favourite actor in Tamil cinema, says a TV channel survey.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil