பாட்ஷா ரீமேக்ல ரஜினி கேரக்டருக்கு அஜித் மட்டும் தான் ஒரே சாய்ஸ்: பிரபல காமெடி நடிகரோட ஆசை பலிக்குமா?
சென்னை: ரஜினி ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஃபேன் பாய் சம்பவமாக அமைந்த படம் 'பாட்ஷா.'
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினி, நக்மா, ரகுவரன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தை ரீமேக் செய்தால், அதில் ரஜினிக்கு பதிலாக அஜித் நடித்தால் எப்படி இருக்கும் என காமெடி பிரபலம் மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.

தரம் அது நிரந்தரம்
90களில் தமிழி சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராஜாங்கம் உச்சத்தில் இருந்தது. 1991ல் தளபதி, அடுத்தாண்டில் அண்ணாமலை என ரஜினியின் படங்கள் தாறுமாறான சம்பவங்களை செய்தன. தளபதியை கொண்டாடித் தீர்ப்பதற்குள், 'அண்ணாமலை' படம் வெளியாக மாஸ் காட்டியது. இதெல்லாம் என்ன மாஸ்?, இதோ இப்ப பாருடா என 'பாட்ஷா' வெளியாகி சொல்லி அடித்தது.

நான் ஒருதடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி
படம் வெளியாகும் முன்னே ரஜினியின் போஸ்டர்கள் வெளியாகி, தீயாய் பரவின. இறுதியாக 1995ல் வெளியான 'பாட்ஷா' தமிழ் சினிமாவின் தரமான ஃபேன் பாய் சம்பவமாக அமைந்தது. பஞ்ச் டயலாக், ரஜினியின் ஸ்டைல், கேங்ஸ்டர் லுக், தேவாவின் பிஜிஎம், ரகுவரனின் வில்லத்தனம் என, சூடு பறக்கும் தம் பிரியாணி ரேஞ்சுக்கு, ரசிகர்களுக்கு அன்லிமிடெட் ட்ரீட்டாக அமைந்தது.

செகண்ட் பார்ட் வருமா?
'பாட்ஷா' படத்தின் வெற்றியால், அதன் இரண்டாம் பாகமும் வர வேண்டும் என ரசிகர்கள் ரொம்பவே விருப்பம் தெரிவித்தனர். ஆனால், இனி நாங்களே நினைத்தாலும் 'பாட்ஷா' மாதிரி ஒரு படம் பண்ண முடியாது என, ரஜினியும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் கூறிவிட்டனர். ஆனாலும் 'பாட்ஷா' படத்தின் ரீமேக்காவது வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரஜினி கேரக்டரில் அஜித்?
ரஜினியின் ரசிகர்களில் பெரும்பாலோனோர் அஜித்துக்கும் ரசிகர்களாக இருப்பதைக் காணலாம். அதேநேரம் ரஜினியின் பில்லா ரீமேக்கில் அஜித் நடித்து அமர்க்களம் செய்தார். அஜித்தின் ஸ்டைலும் மேனரிசமும் பில்லா படத்தில் நச்சென்று செட் ஆனது. அதனால் ரஜினியின் எந்த படங்களை ரீமேக் செய்தாலும், அதில் ரஜினிக்கு பதிலாக அஜித் தான் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பாட்ஷா ரீமேக்கில் அஜித்?
இந்த நிலையில், தற்போது மீண்டும் 'பாட்ஷா' படத்தின் ரீமேக் குறித்த பேச்சுகள் வைரலாகி வருகின்றது. இதுகுறித்து பிரபல காமெடி நடிகர் கருணாகரனும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். "பாட்ஷா படத்தின் ரீமேக் கண்டிப்பாக வரவேண்டும் எனவும், அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதிலாக அஜித்குமார் நடிக்கணும்" என்றும் கூறியுள்ளார். அஜித் மட்டுமே பாட்ஷா கேரக்டருக்கு சரியாக இருப்பார் என கருணாகரன் கூறியுள்ளது, அஜித் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











