ஷாலினிக்காக அஜித் அப்படி பண்ணது சான்ஸே இல்ல... அதுல அவருதான் கில்லி: பிரேம் பிளாஷ்பேக்

சென்னை: அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் ஆகியோருடன் சீரியல் நடிகர் பிரேமும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் பிரேம் கொடுத்த பேட்டி ஒன்றில் ஷாலினி மீது அஜித்துக்கு இருக்கும் காதல் குறித்து சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

ரியல் வின்னர் துணிவு

ரியல் வின்னர் துணிவு

அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 11ம் தேதி வெளியானது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்த அஜித் - ஹெச் வினோத் கூட்டணி, இந்தப் படத்தில் சொல்லி அடித்தது. வங்கிகளின் பின்னணியில் நடக்கும் சைபர் கிரைம்களை மக்களுக்கு எடுத்துக்காட்டிய துணிவு, பாக்ஸ் ஆபிஸில் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள துணிவு படத்துக்கு ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.

சீரியல் நடிகர் பிரேம்

சீரியல் நடிகர் பிரேம்

அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் ஆகியோருடன் சீரியல் நடிகர் பிரேம் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். அஜித்துக்கும் அவருக்கும் இடையேயான சண்டைக் காட்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், அஜித் குறித்த சில நெகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்துள்ளார் பிரேம். ஒருமுறை நடிகர் சங்க நிகழ்ச்சிக்கு மனைவி ஷாலினியுடன் அஜித் காரில் வந்திருந்தார். அப்போது அவரைப் பார்க்க பத்திரிக்கையாளர்களும் ரசிகர்களும் சூழ்ந்துகொண்டனர். உடனே காரில் இருந்து இறங்கிய அஜித், மனைவிக்காக காரின் கதவை திறந்து, கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.

அதுல அவருதான் கில்லி

அதுல அவருதான் கில்லி

அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் என்னால் மறக்க முடியவில்லை. அதன்பின்னர் எனது மனைவி ஒருநாள், அஜித் சாரை பார்ப்பதற்காக வெளியூரிலிருந்து வருவதாக சொன்னார். அதை நான் அவரிடம் கூறியிருந்தேன், அதற்கு அவரோ அவங்க எப்ப வருவாங்க? பத்திரமா வந்துருவாங்களா? என அடிக்கடி என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். இதெல்லாம் நினைச்சு பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கு. உண்மையா சொன்னா caring விஷயத்தில் அஜித் சாரை அடித்துக்கொள்ள யாருமே கிடையாது என கூறியுள்ளார்.

அஜித் - ஷாலினி ஜோடி

அஜித் - ஷாலினி ஜோடி

அமர்க்களம் படத்தின் போது காதலில் விழுந்த அஜித்தும் ஷாலினியும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இன்றுவரை கோலிவுட்டின் க்யூட் ஜோடி என ரசிகர்கள் இவர்களை கொண்டாடி வருகின்றனர். மேலும் பல நேரங்களில் வீட்டில் அஜித் தான் ஷாலினிக்கு சமைத்து கொடுப்பார் என இதற்கு முன்னரும் பல செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், நடிகர் பிரேமும் அஜித் - ஷாலினி ஜோடி குறித்து பேசியுள்ளது ரசிகர்களை கவனிக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X