»   »  அஜீத் - முருகதாஸ் மீண்டும் இணைகிறார்கள்?

அஜீத் - முருகதாஸ் மீண்டும் இணைகிறார்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத்தும் முருகதாசும் மீண்டும் இணைந்து படம் பண்ணுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அஜீத் இப்போது வீரம், வேதாளம் படங்களைத் தந்த சிவாவின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கிறார். இதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.

Ajith to join with AR Murugadoss again

ஏ ஆர் முருகதாஸும் மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படம் உருவாக்கும் வேலையில் தீவிரமாக உள்ளார்.

இந்த இரு படங்களையும் முடித்ததும் அஜீத்தும் முருகதாஸும் புதிய படம் ஒன்றில் இணைகிறார்கள். இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட்ஜெயன்ட் மூவீஸ் பேனரில் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முருகதாஸ் இயக்குநராக அறிமுகமானது அஜீத் நடித்த தீனா படம் மூலம்தான். இந்தப் படத்திலிருந்துதான் அஜீத்தை அவரது ரசிகர்கள் தல என்று அழைக்க ஆரம்பித்தனர். அவருக்கும் இந்த அடை மொழி பிடித்துப் போனதால், அதுவரை பயன்படுத்தி வந்த அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தையே தூக்கிப் போட்டார் அஜீத்.

English summary
Sources say that talks are on to bring Ajith and AR Murugadoss for a possible project for Udhayanidhi Stalin’s Red Giant Movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil