»   »  விஜய்யைத் தொடர்ந்து மோகன் லாலுடன் இணைகிறார் அஜீத்?

விஜய்யைத் தொடர்ந்து மோகன் லாலுடன் இணைகிறார் அஜீத்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜில்லாவில் முதல் முறையாக மோகன் லாலுடன் இணைந்தார் விஜய். படம் பரபரப்பாகப் பேசப்பட்டது. தமிழில் சுமாராகப் போனாலும், தெலுங்கில் நல்ல வசூலைக் குவித்தது.

அவரைத் தொடர்ந்து அஜீத்துடம் மோகன் லாலுடன் இணையவிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Ajith to join with Mohan Lal?

காலில் அறுவைச் சிகிச்சை செய்துள்ள அஜீத் இப்போது ஓய்வெடுத்து வருகிறார். ஓய்வுக்குப் பிறகு அவர் நடிக்கவிருக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

வேதாளம் படத்துக்குப் பிறகு மீண்டும் சிவாவின் இயக்கத்தில் நடிக்கவே அஜீத் மிகவும் விரும்புகிறாராம். எனவே அவருக்கேற்ற கதை ஒன்றை உருவாக்குவதில் சிவா தீவிரமாக உள்ளார்.

அஜீத்தை தான் மூன்றாவது முறையாக இயக்கப் போவது உண்மைதான் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் மலையாளத்தில் பெரும் நடிகராகத் திகழும் மோகன் லாலும் நடிப்பார் என்கிறார்கள்.

இன்னும் சில தினங்களில் இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனத் தெரிகிறது.

English summary
Kerala media has reported that Malayalam Superstar Mohanlal and Ajith will be coming together for a new film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil