»   »  அஜீத் மற்றும் காஜலை கொண்டாடும் கன்னட உலகினர்.. ஏன் எதற்கு...?

அஜீத் மற்றும் காஜலை கொண்டாடும் கன்னட உலகினர்.. ஏன் எதற்கு...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லோருக்கும் கடவுளான கூகுளாண்டவர் சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறார், அதாவது ஒவ்வொரு வருடமும் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் யார் என்று பட்டியலை கூகுள் வருடாவருடம் அளிக்கும்.

மக்களிடம் மிகவும் பிரபலம் வாய்ந்தவர்கள் யார் என்பதை சொல்லும் விதமாகவே, பெரும்பாலும் கூகுளின் முடிவுகள் இருக்கும். அந்த வகையில் கடந்த 6 மாதத்தில் கன்னட மக்கள் அதிகம் தேடிய நடிகர்கள் யார் என்ற பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.

இதில் கன்னட நடிகர்களை விட தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களே அதிகம் இடம்பெற்று இருக்கின்றனர், இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சத்தமில்லாமல் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் அஜீத்.

கூகுளின் தேடல்களில் அதிகம் இடம்பிடித்த 10 நடிகர்கள் யார் என்று பார்க்கலாம்.

அஜீத்

அஜீத்

தமிழ்நாட்டின் தல என்று அழைக்கப்படும் அஜீத் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார், சமீபத்தில் அஜீத்தின் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படம் மற்றும் அது தொடர்பான விஷயங்களை கூகுளே கதறும் அளவிற்கு தேடியுள்ளனர் கன்னட மைந்தர்கள்.

பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலி நாயகன் பிரபாஸுக்கு இந்தப் பட்டியலில் 2 வது இடம், பாகுபலி திரைப்படம் கன்னடத்திலும் ஹிட்டடிக்க பிரபாசை வலை வீசித் தேடியிருக்கின்றனர் சாண்டல்வுட்டினர்.

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

ஆந்திர மைந்தன் அல்லு அர்ஜுனிற்கு இந்தப் பட்டியலில் 3 வது இடம், இளமையான தோற்றம் மற்றும் வித்தியாசமான படங்கள் என்று புல் பார்மில் கன்னட ரசிகர்கள் மத்தியில் "கன்" மாதிரி நிற்கிறார் அல்லு அர்ஜுன்.

ரஜினி

ரஜினி

கன்னட மைந்தரான ரஜினிக்கு பட்டியலில் 4 வது இடம், மிக நீண்ட நாட்களாக எந்தப் படத்திலும் நடிக்காதது இந்த பின்னடைவுக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

தனுஷ்

தனுஷ்

மாமனாருக்கு அடுத்த இடத்தை மருமகன் தனுஷ் பிடித்திருக்கிறார், தனுஷின் நடிப்பிற்காக அவரை அதிகம் தேடியிருப்பதாக கூறுகின்றனர்.

மகேஷ்பாபு

மகேஷ்பாபு

செல்வந்தன் ஹீரோ, ஆந்திர உலகின் இளவரசன் மகேஷ்பாபுவிற்கு இந்தப் பட்டியலில் 6 வது இடம் கிடைத்து இருக்கிறது, சாரை செல்வந்தன் படத்திற்காக அதிகம் தேடியிருக்கின்றனர்.

விக்ரம்

விக்ரம்

வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் நடித்தாலும் கன்னட உலகிலும் விக்ரமின் மார்க்கெட் நன்றாகவே இருக்கிறது, ஐ மற்றும் அது தொடர்பான தகவல்கள் விக்ரமின் புதிய படம் போன்றவற்றிற்காக விக்ரமை அதிகம் தேடியிருக்கின்றனர்.

சுதீப்

சுதீப்

மண்ணின் மைந்தனை தேடக் காரணம் தேவை இல்லை என்றாலும், சாருக்கு இந்தப் பட்டியலில் 8 வது இடமே கிடைத்திருக்கிறது. பட்டியலில் இடம்பெற்ற ஒரே கன்னட நடிகர் சுதீப் என்பது குறிப்பிடத்தக்கது.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

ஆந்திர உலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் பவன் கல்யாண் இந்தப் பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கிறார், பவனின் அடுத்தடுத்த படங்களுக்காக அவரை அதிகம் தேடியிருக்கின்றனர் ரசிகர்கள்.

ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர்

ஆந்திராவில் தனது நடிப்பால் தனியிடத்தைப் பிடித்திருக்கும் ஜூனியர் என்டிஆர் இந்தப் பட்டியலில் 10 வது இடத்தைப் பிடித்திருக்கிறார், இவரின் படங்களுக்கும் கன்னட ரசிகர்கள் மத்தியில் தனியிடம் இருக்கிறது.

காஜல் தான் டாப்

காஜல் தான் டாப்

புதிதாக படங்கள் எதுவும் இல்லையென்றாலும் கூட கன்னட ரசிகர்கள் அதிகம் தேடிய நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் காஜல் அகர்வால். அடுத்தடுத்த இடங்களில் அனுஷ்கா, தமன்னா ஆகியோர் உள்ளனர்.

விஜய் மற்றும் கமல்

விஜய் மற்றும் கமல்

இந்தத் தேடலில் இன்னுமொரு ஆச்சரிய நிகழ்வாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்று கூகுள் அறிவித்து இருக்கிறது.

தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து கன்னட உலகிலும் அஜீத்தின் ராஜ்ஜியம் ஆரம்பமாகி விட்டது போல....

English summary
Ajith and Kajal Agarwal Reached Top Rank Karnataka Google Search, in Last 6 Months.
Please Wait while comments are loading...