அப்பாவை விட வளர்ந்து விட்டாரா? இணையத்தில் தீயாய் பரவும் அஜித்தின் குடும்ப போட்டோ!
சென்னை: கோலிவுட்டில் முன்னணி தமிழ் நடிகராக வலம் வருபவர், அஜித் குமார். அண்மையில் இவர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. அஜித் நடிகராக மட்டுமில்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருகிறார். அஜித்குமார் தற்போது ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார். அதற்காக தயாராகி வரும் அஜித், போட்டிக்கு முன்பாக, மனைவி மற்றும் மகளை சந்தித்து பேசி உள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் அஜித் 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பெயரில் சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த அணி துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றது. அஜித் குமார் ரேசிங் அணி, ஸ்பெயினில் நடைபெறவிருக்கும் 24 மணி நேர க்ரெவென்டிக் சீரிஸ் போட்டிக்காக பார்சிலோனாவில் தயாராகி வருகிறது. நடந்த முடிந்த இதற்கான தகுதி சுற்றில் அஜித் குமார் ரேசிங் அணி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. அதனால், அஜித்குமார் ரேசிங் அணியினர், மெயின் போட்டியில் வெற்றி பெற கடுமையாக தயராகி வருகின்றனர். இதில் நடிகர் அஜித் வெற்றிப்பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அஜித்குமார் ரேஸிங்: மரேஸுக்கு முன்னதாக தனது மனைவி மற்றும் மகளுடன் அஜித்குமார் சந்தித்தார். அப்போது, அனெளஷ்கா மற்றும் மனைவி ஷாலினி இருவருமே கன்னத்தில் முத்தம் கொடுத்து வெற்றி பெற வாழ்த்தினார்கள். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பாவைவிட உயரமாக மகள் வளர்ந்துவிட்டாள் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகர் அஜித் குமார் அமர்களம் படத்தில் ஷாலினியுடன் சேர்ந்து நடித்த போது இருவரும் காதல் வயப்பட்டனர். இதைத்தொடர்ந்து இருவரும் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மகிழ்ச்சியான சந்திப்பு: திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து மகள் அனோஷ்கா 2008ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு தற்போது 17 வயதாகியிருக்கிறது. அண்மையில் அனோஷ்காவின் 17வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாளை அனௌஷ்கா, தனது பெற்றோர், மாமா ரிச்சர்ட் ரிஷி மற்றும் சித்தி ஷாமிலியுடனும் கொண்டாடி இருந்தார். திரையுலகில் இருக்கும் நடிகர்களில் அஜித் சற்று வித்தியாசப்பட்டவர். ஷூட்டிங்கை தவிர வேறு எங்கும் தன்னை சுற்றி கேமரா இருப்பதை விரும்ப மாட்டார். அது மட்டுமல்ல, ரசிகர்கள் மத்தியில் 'நல்ல குடும்பஸ்தன்' என பெயர் எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











