பிறந்ததில் இருந்தே அப்படி தான் கூப்பிடுறோம்.. திடீரென வேணாம்னு சொன்னா எப்படி தல? ரசிகர்கள் அப்செட்!
சென்னை: 'தல' எனும் அடைமொழியுடன் இனி தன்னை அழைக்க வேண்டாம் என்கிற அறிவிப்பை நடிகர் அஜித் குமார் வெளியிட்டது ஏகப்பட்ட அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.
அஜித் சொல்லிட்டார் அவர் பேச்சை தட்டக் கூடாது என சில ரசிகர்களும், பிறந்ததில் இருந்தே உங்களை அப்படித்தானே கூப்பிடுறோம்.. திடீரென வேண்டாம் என்றால் எப்படி என்று சில ரசிகர்களும் ட்வீட் போட்டு வருகின்றனர்.
#AjithKumar என்ற ஹாஷ்டேக் சமூக வலைதளத்தில் தற்போது இந்த பிரச்சனை காரணமாக டிரெண்டாகி வருகிறது.

அதிரடி முடிவு
வலிமை படத்தின் அப்டேட் எப்போ வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு திடீரென அஜித் தரப்பில் இருந்து இப்படியொரு அதிரடி அறிக்கை வரும் என ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ரசிகர் மன்றத்தை அதிரடியாக கலைத்தது போலவே தற்போது 'தல' உள்ளிட்ட அடைமொழிகளும் வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.

என்ன பிரச்சனை
நடிகர் அஜித் குமார் எந்தவொரு அறிவிப்பையும் சாதாரணமாக அறிவிக்க மாட்டார். அதற்கு பின் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 'தல' அடைமொழி வேண்டாம் என அவர் கூற காரணம் கிரிக்கெட் வீரர் தோனியை தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களே 'தல' என அழைத்தது தான் என்றும் அதன் காரணமாக ரசிகர்களுக்கு எழும் சண்டையை போக்கவே இப்படி செய்துள்ளார் அஜித் குமார் என கூறப்படுகிறது.

தாய், தந்தை, தல
நடிகர் அஜித் குமார் எந்தவொரு அறிவிப்பை வெளியிட்டாலும் அதனை உடனடியாக ஆமோதிக்கும் ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் உள்ளனர். மனதளவில் சங்கடம் ஏற்பட்டாலும், அஜித் சொல்லிட்டாரே என விஜய் ரசிகர்கள் உடன் சண்டைக்கே போகாமல் இருக்கும் பல அஜித் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், அஜித்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, "தாய், தந்தை, தல.. இனி அம்மா, அப்பா, அஜித்.. என்றும் உங்கள் வழியில்" என அதிரடியாக அஜித் ரசிகர்கள் மாறி விட்டனர்.

ரசிகர்கள் தான் காரணம்
நடிகர் அஜித் இத்தனை ஆண்டுகளாக 'தல' என்கிற பட்டத்துக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், திடீரென அவர் இப்படி வேண்டாம் என கோரிக்கை வைக்க முக்கிய காரணமே ஒரே தல அஜித், ஒரே தல தோனி என்கிற ரசிகர்களின் மோசமான ஹாஷ்டேக் சண்டை தான் என்றும் ரசிகர்களே ட்வீட் போட்டு வருகின்றனர்.

பிறந்ததில் இருந்தே
தல என்பது உயிரோடு கலந்தது.. பிறந்ததில் இருந்தே அந்த பெயரில் தான் நான் உங்களை அதிகமா அடையாள படுத்திருக்கேன். அதுக்கு காரணம் அஜித் குமாருன்னு உங்க பெயரை சொன்னா மரியாதையா இருக்காதேன்னு தான். தெய்வத்துக்கு சமமா இருக்குற உங்களை பெயர் சொல்லி கூப்பிடமாட்டேன். 'தல'ன்னு தான் கூப்பிடுவேன்.. சாரி தல! என ரசிகர்கள் அஜித் வைத்த கோரிக்கையால் ரொம்பவே அப்செட் ஆகி ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











