எனக்கு எந்த பிரஷரும் இல்லை.. அஜித் முழு சுதந்திரம் கொடுத்துருக்காரு.. விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட தமிழ் சினிமா இயக்குநர்கள் கலந்து கொண்ட சினிமா 2022 ரவுண்ட் டேபிள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஏகே 62 திரைப்படம் என்ன மாதிரியான படம் என்றும் அஜித் கொடுத்த முழு சுதந்திரத்தையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளிப்படையாக பேசி உள்ளார்.
வாரிசு, துணிவு படங்கள் வெளியாக உள்ள நிலையில், அஜித் vs விஜய் ஃபேஸ் ஆஃப் நடப்பதற்கு முன்னாடி தளபதி 67 இயக்குநர் vs ஏகே 62 இயக்குநர்களின் ஃபேஸ் ஆஃப் சமீபத்தில் அரங்கேறியது.
இந்நிலையில், இரண்டு பெரிய படங்கள் குறித்த பல தகவல்கள் இந்த ரவுண்ட் டேபிள் பேட்டி மூலம் ரசிகர்களுக்கு அப்டேட்களாக கிடைத்துள்ளன.

அஜித் படம் பண்றேன்
லோகேஷ் கனகராஜிடம் தளபதி 67 படம் பண்றாரு.. ஆனால், என்ன பண்ணப் போறாருன்னு கேட்டாலும் சொல்ல மாட்டாரு என பரத்வாஜ் ரங்கநாதன் சொல்லிவிட்டு, அடுத்து விக்னேஷ் சிவனிடம் நீங்க என்ன பண்றீங்க என கேட்டதும், அஜித் சார் படம் பண்றாரு என ரொம்பவே தன்னடக்கமாக விக்னேஷ் சிவன் சொல்ல.. ஓ அப்படியா என பரத்வாஜ் ரங்கநாதன் பேசிய வீடியோ க்ளிப்பை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பிரஷர் இல்லை
லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் ஓரியன்டட் ஃபிலிம் பண்றதுனால ஹீரோக்களுடன் ரொம்பவே ஈசியா கனெக்ட் ஆகிடுறாரு.. ஆனால், நான் இதுவரை ஆக்ஷன் படங்கள் எல்லாம் பண்ணதே இல்லை. என் ஸ்டைலே தனியா இருக்கும். நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் மாதிரி இருக்கும்.. ஆனால், எனக்கு எந்தவொரு பிரஷரும் அஜித் சார் இதுவரை கொடுத்ததே இல்லை. அதுவே எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என்று கூறினார்.

முழு சுதந்திரம்
உங்க ஸ்டைலிலேயே படம் பண்ணுங்க விக்னேஷ் என அஜித் சார் எனக்கு ஃபுல் ஃப்ரீடம் கொடுத்துருக்காரு.. அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு வித்தியாசமா ஒரு ஃபீல் குட் மூவியை கொடுக்க முயற்சி செய்வேன் என இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏகே 62 அதிரடி ஆக்ஷன் படமாக எல்லாம் வராது, அனைவரும் பார்த்து ரசிக்கும் படியான படமாக உருவாக போகிறது என்கிற அப்டேட்டை கொடுத்துள்ளார்.

துணிவுக்கு பிறகு
அஜித்தின் துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. துணிவு படம் அயோக்கியர்களின் ஆட்டமாக வெளியாகிறது. நடிகர் அஜித் மங்காத்தா, பில்லா படங்களில் நடித்தது போல நெகட்டிவ் ரோலில் வெளுத்து வாங்க உள்ளார். அதன் பின்னர் செம கூலாக விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கப் போகிறார். தற்போது தனது பைக்கில் வேர்ல்ட் டூர் அடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











