Don't Miss!
- News
குழந்தைக்காக 'காலிங் பெல்' அழுத்தாமல்.. பைப் மீது ஏறி சென்ற தந்தை.. ஒரே நொடியில்.. ப்ச்.. பரிதாபம்!
- Lifestyle
இந்த 3 ஹார்மோன்கள்தான் பெண்களுக்கு பாலியல் ஆசை குறைய காரணமாம்... உடனே இத சரி பண்ணுங்க...!
- Automobiles
கார்களையே தூக்கி சாப்பிடும் வசதி! புதிய ஹோண்டா ஆக்டிவா விலை இவ்ளோதானா! இந்த மாதிரி ஒரு ஸ்கூட்டரை பாத்ததே இல்ல!
- Finance
மோடி அரசு வாங்கப்போகும் ரூ.16 லட்சம் கோடி கடன்.. பட்ஜெட்-க்கு முன்பே ரிப்போர்ட்..!
- Technology
OnePlus Keyboard-ல் இப்படி ஒரு ஸ்பெஷலிட்டியா? இப்போதே வாங்க ரெடியாகும் இந்தியர்கள்.!
- Sports
4 போட்டிகளில் விளையாட தடையா?.. இஷான் கிஷானுக்கு வந்த பெரும் சிக்கல்.. விளையாட்டு விணையானது எப்படி?
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
படத்துல இதை கவனிச்சீங்களா? எச் வினோத்துக்கு உண்மையிலேயே ‘துணிவு’ தான்!
சென்னை : அஜித்தின் துணிவு படம் பார்த்து பூரித்துப்போன ரசிகர்கள்,படத்தில் இருக்கும் ட்விஸ்டை கண்டுபிடித்து எச் வினோத்தை புகழ்ந்து வருகின்றனர்.
துணிவு திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித் சிறப்பான விருந்து கொடுத்துள்ளார்.
வங்கி கொள்ளையை மையமாக வைத்துதான் துணிவு திரைப்படத்தின் கதை என்றதும், மணி ஹெய்ஸ்ட் படமா என ரசிகர்கள் கேட்டு வந்தார்கள். ஆனால், 'ஐ' படத்தில் வரும் வசனத்தைப் போல அதுக்கும் மேல என்று ரசிகர்கள் துணிவு படத்தை இன்று கொண்டாடி வருகின்றனர்.
வாரிசு, துணிவு FDFS Box Office ரிப்போர்ட்... விஜய்யை ஓரங்கட்டிய அஜித்... வெறித்தனமான சம்பவம்

எல்லாமே பிளஸ் தான்
அஜித் ரசிகர் கடந்த ஒரே வாரமாக செம பிஸி,போஸ்டர் அடிப்பது, கட் அவுட் வைப்பது, டிக்கெட் முன் பதிவு செய்வதுமாக இருந்தனர். நள்ளிரவு படம் பார்த்து விட்டு, படம் பார்த்த உற்சாகத்தில் குப்புறப்படுத்து தூங்கி விட்டார்கள். படம் எப்படி இருக்கு பிளஸ்...என்ன மைனஸ் என்ன என்று கேட்டால், தல படத்தில் எல்லாமே பிளஸ் தான் என்கின்றனர்.

முதல் பாதி சூப்பர்
துணிவு படத்தின் முதல் பாதியை அஜித், தனது ரசிகர்களுக்காகவும், இரண்டாம் பாதியை பார்வையாளர்களுக்காகவும் பிளான் போட்டு நடித்திருக்கிறார். அஜித்தின் வாக், லுக்,ஸ்டைல் என அனைத்துமே இந்த படத்தில் சற்று வித்தியாசமாகவே இருக்கிறது. குறிப்பாக அதிகாரிகளை ஏமாற்ற, மைக்கேல் ஜாக்சனின் அடையாளத்தை எடுத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் மூன்வாக் செய்வது அல்டிமேட்.

வங்கிகளின் மோசடி
வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை கவர, கிரெடிட் கார்டுகள், மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் நடக்கும் முறைகேடுகளை பற்றியும், வரி செலுத்துவோரின் பணத்தை வங்கிகள் எவ்வாறு திருடுகின்றன என்பதை, சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் தனக்கே உரித்தான பாணியில் எச் வினோத் இயக்கி உள்ளார்.

நோ காதல்...நோ ரொமான்ஸ்
வழக்கமாக எச் வினோத்தின் படங்களில் ஹீரோயின் ஹீரோ இருப்பார்கள் ஆனால், நோ காதல், நோ ரொமான்ஸ். இதே பார்முலா துணிவு படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நடிகை மஞ்சு வாரியர் குறைந்த காட்சிகளிலே வந்தாலும் அதிரடி சண்டை காட்சிகளில் மிரட்டி உள்ளார். மேலும்,ஜிப்ரானின் இசை,பிஜிஎம் என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

எதிர்பாராத ட்விஸ்ட்
இந்நிலையில், துணிவு படம் பார்த்த ரசிகர்களுக்கு இயக்குநர் எச் வினோத், யாருமே எதிர்பாராத வகையில் ட்விஸ்ட் ஒன்றை வைத்திருக்கிறார். படத்தில் நடிகர் அஜித்தின் கதாப்பாத்திரத்துக்கு பெயரே இல்லை. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. கடைசி வரை அஜித்தின் பெயரை எந்த இடத்திலும் சொல்லவே இல்லை. இதை சரியாக கவனித்த ரசிகர்கள் இப்படி புதுசா யோசிக்க உண்மையில் உங்களுக்கு துணிவுதான் என இயக்குநரை புகழ்ந்து வருகின்றனர்.

இதுதான் காரணமா
கடந்த வாரம் துணிவு திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் பெயர்கள் வெளியிடப்பட்டது. அதில் மஞ்சு வாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்திலும், சமுத்திரக்கனி தயாளன் கதாபாத்திரத்திலும், ஜான் கொக்கன் கிரிஷ் கதாபாத்திரத்திலும் நடிப்பதாக அறிவித்த படக்குழு அஜித்தின் கேரக்டர் பெயரை மட்டும் அறிவிக்காமல் வைத்திருந்தன் பின்னணி இதுதானா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.