முதலில் ரஜினிகாந்த்… இப்போ அஜித்குமார்… அடுத்தடுத்து மெகா ஸ்டார்களை வளைத்துப் போடும் லைகா!

சென்னை: அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கும் துணிவு படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

துணிவு படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் 'ஏகே 62' படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

ஏகே 62 படத்தை லைகா தயாரிக்கும் நிலையில், அடுத்தடுத்து அஜித் நடிக்கவிருக்கும் மேலும் 2 படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் ஏகே 62

விரைவில் ஏகே 62

வலிமை படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கும் துணிவு படத்தில் நடித்து வருகிறார் அஜித். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக அஜித், ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில் தொடர்ந்து 3 படங்களில் அஜித் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், துணிவு படப்பிடிப்புக்காக பாங்காங் சென்றுள்ள அஜித், விரைவில் 'ஏகே 62' ஷூட்டிங்கிலும் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

லைகா தயாரிப்பில் ஏகே 62

லைகா தயாரிப்பில் ஏகே 62

அஜித்தின் 62வது படமாக உருவாகும் 'ஏகே 62' விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ளது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக நடிப்பது யார் என இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. ஆனால், நயன்தாரா, தீபிகா படுகோன், ஆலியா பட் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில், சமீபத்தில் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரனை அஜித் நேரில் சந்தித்த போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகின.

அடுத்தடுத்து 2 படங்கள்

அடுத்தடுத்து 2 படங்கள்

ஏகே 62 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதனைத் தொடர்ந்து லைகா தயாரிக்கும் மேலும் இரண்டு படங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தான் அஜித் - சுபாஷ்கரன் சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. போனி கபூர் தயாரிப்பில் தொடர்ந்து 3 படங்களில் நடிக்கும் அஜித், அதே பாணியில் லைகா தயாரிக்கும் படங்களிலும் கமிட் ஆகியுள்ளாரா என பேச்சு எழுந்துள்ளது. மொத்தமாக 3 படங்களுக்கும் சேர்த்து அஜித்துக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க லைகா பேசி முடித்துள்ளதாம்.

ரஜினியை தொடர்ந்து அஜித்

ரஜினியை தொடர்ந்து அஜித்

லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்னர் ரஜினியின் அடுத்த 2 படங்களையும் லைகா தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ரஜினியின் தலைவர் 170, தலைவர் 171 என இந்த இரண்டு படங்களுமே லைகா தயாரிப்பில் உருவாகவுள்ளது. இந்நிலையில் தற்போது அதே பாணியில் அஜித்தும் லைகாவுடன் கூட்டணி வைத்துள்ளது கோலிவுட்டையே பரபரக்க வைத்துள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X