Ajith: கண்களில் வெறி.. கையில் துப்பாக்கி.. அஜித் வெச்சக்குறி தப்புமா?
சென்னை: நடிகர் அஜித் குமார் தனது மனைவி மற்றும் மகனுடன் நேற்று பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசணம் செய்த நிலையில் இன்று, திருப்பூரில் உள்ள கொங்குநாடு ரைபிள் கிளப்பில், துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித் நடிகராக மட்டுமில்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருகிறார். 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பெயரில் சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த அணி துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றது.

அஜித் குமாரின் அடுத்த படம்: ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. குட் பேட் அக்லி படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றாலும், கதையாக அந்த படத்தின் மீது பலரும் விமர்சனத்தை வந்தன. இதனால், ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்த படத்தை இயக்கினாலும் அந்த படத்தை அவரது ரசிகர்களுக்கான படமாக இயக்காமல் அனைவருக்குமான படமாக இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, பிரசாந்த் நீல் அஜித்தை வைத்து கேஜிஎஃப் வரிசையில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதனால் விரைவில் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் யார்? அந்த படத்தின் தயாரிப்பாளர் யார்? என்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டிரெண்டாகும் வீடியோ: இந்த நிலையில் நடிகர் அஜித்குமார், திருப்பூரில் உள்ள கொங்குநாடு ரைபிள் கிளப்பில், துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அஜித் குமாரின் மேளாலர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகர் அஜித்குமார் கொங்குநாடு ரைபிள் கிளப்பின் நிறுவனர் செந்தில் குமார் உடன் இணைந்து, துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இலக்கை அஜித் குறிபார்த்து சுடும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தை பெற்றுள்ளது. இந்த வீடியோவை அஜித்தின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











