அஜித்துக்கு உதயநிதி பாராட்டு.. உடனே ரிப்ளை செய்த அஜித்குமார் ரேஸிங் டீம்.. அடடே பிரமாதம்!
சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸுல் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வரை கார் ரேஸ் ஷெட்யூலில் செம பிஸியாக உள்ளார் அஜித். இப்படி இருக்கும் போது கடந்த வாரத்தில் அவரது அணி Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் வென்றது. இதற்கு பாராட்டியும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்து வாழ்த்தி உள்ளார். அதற்கு அஜித்குமார் ரேஸிங் அணி சார்பில் இருந்து நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி, தனது எக்ஸ் பக்கத்தில், " நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம்.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும்- அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம். 'Ajith Kumar Racing Team' track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜித் தரப்பு பதில்: இவரது இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக, " அஜித் குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - தமிழ்நாட்டின் மாண்புமிகு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுக்கு, அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது. உங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் எங்களுக்குத் துணை நின்றுவந்துள்ளன.
எங்களின் அடுத்த கட்ட பங்கேற்பு, கீழ்காணும் புகழ்பெற்ற சர்வதேச மோட்டார் விளையாட்டு போட்டிகளில் நடைபெறும்:
ஆசியன் லெ மான்ஸ் தொடர் (Asian Le Mans Series)
•டிசம்பர் 13 & 14, 2025 - சேபாங், மலேசியா
•ஜனவரி 31 & பிப்ரவரி 01, 2026 - துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
•பிப்ரவரி 07 & 08, 2026 - அபூதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
கிரெவென்டிக் 24 மணி நேர தொடர் (Creventic 24H Series)
•டிசம்பர் 05 & 06, 2025 - சேபாங், மலேசியா
•ஜனவரி 09 & 10, 2026 - அபூதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
•ஜனவரி 17 & 18, 2026 - துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

வரவிருக்கும் பங்கேற்புகள் - 2026
•மிச்சலின் லெ மான்ஸ் யூரோப்பிய தொடர் (Michelin Le Mans Cup - European Series)
•கிரெவென்டிக் 24 மணி நேர யூரோப்பிய தொடர் (Creventic 24H - European Series)
உங்களின் அன்பும், ஆதரவும், வாழ்த்துகளும் எப்போதும் எங்களுடன் இருக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். அஜித் குமார் மற்றும் அவரது அணி, மேலும் உயர்ந்த இலக்குகளுக்காக தங்கள் முழு மனதும் உடலும் அர்ப்பணித்து செயல்பட உள்ளனர். அன்புடன், அஜித் குமார் மற்றும் அஜித் குமார் ரேசிங் அணி" என்று குறிப்பிடப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், அப்படினா அஜித் அடுத்த வருசம்தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் போலயே என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











