ஏகே 61 படத்தின் டைட்டில் லீக் ஆகிடுச்சா? பரபரக்கும் தகவல்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போ?

சென்னை: நடிகர் அஜித்தின் ஏகே 61 படத்தின் டைட்டில் இதுதான் என சோஷியல் மீடியாவில் ஒரு டைட்டில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடித்துள்ள ஏகே 61 படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

தாய்லாந்தில் கடைசி கட்ட பணிகள் நடைபெற உள்ள நிலையில், அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் என்ட்ரி

அஜித் என்ட்ரி

ஏகே 61 படத்தின் அசத்தல் அப்டேட் உடன் அஜித்தின் அட்டகாசமான என்ட்ரி சோஷியல் மீடியாவையே தெறிக்க விடப் போகிறது என ரசிகர்கள் தொடர்ந்து #AK61FirstLook ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இன்றைக்கு தான் அந்த பொன்னான நாள் என்றும் கண்டிப்பாக ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என்றும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

வினோத் உடன் ஹாட்ரிக்

வினோத் உடன் ஹாட்ரிக்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ள படம் தான் ஏகே 61. இந்த படத்தையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார். தொடர்ந்து ரசிகர்கள் அப்டேட் கேட்டு டார்ச்சர் செய்து வந்த நிலையில், ஒரு வழியாக அவர்களுக்கு ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக் கிடைக்கப் போகிறது என்கிற தகவல் தீயாக பரவி வருகிறது.

இதுதான் டைட்டிலா

இதுதான் டைட்டிலா

அஜித்தின் வெற்றி வாசகமான 'துணிவே துணை' தான் ஏகே 61 படத்தின் டைட்டில் என்கிற தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் கசிந்து தீயாக பரவி வருகிறது. ஆனால், ஏற்கனவே அந்த பெயரில் 1976ம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்த படம் ஒன்று வெளியாகி உள்ளதால் அதற்கான அனுமதியை பெற படக்குழு முயற்சி செய்து வருவதாகவும், அந்த அனுமதி கிடைக்காவிட்டால், 'துணிவு' என்கிற டைட்டிலை வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது எந்தளவுக்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் தெரியவரும்.

வியாழக்கிழமை தான் வரும்

வியாழக்கிழமை தான் வரும்

ஏகே 61 டைட்டில் லீக் ஆனதால் உடனடியாக இன்றே ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிடுவார்கள் என அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் படி பார்த்தால் நாளை தான் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர். எப்படியோ சீக்கிரமே அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாவை தெறிக்க விடப் போவது கன்ஃபார்ம்.

டூர் முடித்த அஜித்

டூர் முடித்த அஜித்

ஏகே 61 படத்தின் ஷூட்டிங் ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், நடிகர் அஜித் பைக் டூருக்கு கிளம்பி விட்டார். அதன் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தினமும் வெளியாகி டிரெண்டாகி வந்தன. இந்நிலையில், தனது பைக் டூரை முடித்து விட்டு விரைவில் வெளிநாட்டில் தொடங்கவுள்ள இறுதிகட்ட படப்பிடிப்பில் நடிகர் அஜித் பங்கேற்க போவதாகவும், ஏகே 61 முழுக்க அவர் டூரில் எப்படி இருந்தாரோ அதே லுக்கில் தான் வரப் போகிறார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X