துணிவு.. இதுதான் ஏகே 61 படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டிலா? ஃபர்ஸ்ட் லுக்கே லீக் ஆகிடுச்சா?
சென்னை: நடிகர் அஜித் குமாரின் ஏகே 61 படத்தின் டைட்டில் கசிந்து விட்டதாக ஏகப்பட்ட ரசிகர்களும் ப்ளூ டிக் புள்ளிகளும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
#Thunivu என்கிற ஹாஷ்டேக்கையே போட்டு அஜித் படத்தின் டைட்டில் 'துணிவு' தான் என உறுதி செய்துள்ளனர்.
துணிவே துணை என்கிற டைட்டிலும் பரிசீலனையில் இருந்ததாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஏகே 61 டைட்டில் இதுதானா
இயக்குநர் ஹெச். வினோத் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை என தமிழிலேயே தொடர்ந்து தலைப்பு வைத்து வரும் நிலையில், அஜித்தின் 61வது படத்திற்கு துணிவு என்கிற தலைப்பை வைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 6.30 மணிக்கு வரும் என்றும் ட்வீட்கள் பறக்கின்றன.

ரைட்ஸ் கிடைக்கலையா
ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான துணிவே துணை படத்தின் டைட்டிலைத் தான் வைக்கப் போவதாக முதலில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், அந்த படத்திற்கான உரிமம் கிடைக்காத காரணத்தால் அதை அப்படியே சுருக்கி வலிமை போல துணிவு என 3 வார்த்தைகளில் டைட்டிலை ஹெச். வினோத் முடிவு செய்துள்ளார் என்று கூறுகின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக் இப்படித்தான் இருக்கும்
டைட்டில் மட்டுமின்றி ஃபர்ஸ்ட் லுக்கும் இப்படித்தான் இருக்கும் என்றும் சோஷியல் மீடியாவில் அஜித் ரசிகர்கள் அனைத்து சீக்ரெட்களையும் லீக் செய்து வருகின்றனர் ஒரு அஜித் சேரில் அமர்ந்தும், இன்னொரு அஜித் துப்பாக்கியுடன் நின்றபடியும் ஃபர்ஸ்ட் லுக் இருக்கும் என ட்வீட் போட்டு வருகின்றனர். மேலும், சிலர் ஃபர்ஸ்ட் லுக்கே லீக் ஆகிடுச்சு என ஒரு போஸ்டரையும் பதிவிட்டு வருகின்றனர்.

வில்லன் என்ட்ரி
வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்றும் ஒரு அஜித் வில்லன் என்றும் மற்றொரு அஜித் ஹீரோ என்றும் ரசிகர்களே ஏகப்பட்ட கதைகளை கட்டவிழ்த்து வருகின்றனர். ஒரே அஜித் தான் அவருக்கு டபுள் ஷேட் என்றும் மங்காத்தா அஜித்தை விட பயங்கரமான வில்லன் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என அஜித் ரசிகர்கள் ஆரவாரம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











