Thunivu Box Office Prediction: தமிழ்நாட்டில் தல தான் டாப்.. துணிவு முதல் நாள் வசூல் கணிப்பு!

சென்னை: வாரிசு மற்றும் துணிவு என இரு படங்கள் இன்று ஒரே நாளில் வெளியானாலும் தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணிக்கே அஜித்தின் துணிவு படத்துக்கான சிறப்பு காட்சி வெளியாகி உள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படம் இன்று வெளியானது. முதல் பாதி முழுவதும் அஜித்தின் வில்லன் ரோல் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்து விட்டது.

தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்கும் நடிகர் அஜித்தின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு உலகளவில் வாரிசு படத்தை முந்தியதா என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

தல தாறுமாறு

தல தாறுமாறு

நடிகர் அஜித் தன்னை தல என அழைக்காதீர்கள் அஜித் குமார் அல்லது ஏகே என்று அழையுங்கள் என்று அறிவுறுத்தினாலும் துணிவு படத்தில் மீண்டும் பழைய வில்லன் அஜித்தை பார்த்த ரசிகர்கள் தல தாறுமாறு என முதல் பாதி முழுவதும் எந்தவொரு வசனமும் காதில் விழாத அளவுக்கு ஆரம்பம் முதல் முடிவு வரை கத்தி கூச்சலிட்டும், விசில் அடித்தும் தியேட்டரை தெறிக்கவிட்டுள்ளனர்.

எச். வினோத் அறிவுரை

எச். வினோத் அறிவுரை

ரசிகர்கள் நடிகர்களின் படங்களுக்காக இத்தனை நாட்களை செலவு செய்ய தேவையில்லை என்றும் தங்களின் நேரத்தை அதிகம் வீணடிக்கின்றனர் என்றும் இயக்குநர் எச். வினோத் ப்ரமோஷன் பேட்டிகளில் கூட இளைஞர்களுக்கான அட்வைஸை வழங்கி இருந்தார். ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாத நிலையில், துணிவு படத்தின் கொண்டாட்டத்தில் லாரியில் இருந்து பரத்குமார் எனும் இளைஞர் கீழே விழுந்து பலியானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஹவுஸ்ஃபுல் புக்கிங்

ஹவுஸ்ஃபுல் புக்கிங்

வாரிசு படத்தை போலவே அஜித்தின் துணிவு படமும் கிட்டத்தட்ட 1 வாரத்துக்கும் மேலாக அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் புக்கிங் ஆகி உள்ளன. முதல் பாதியில் அஜித் ரசிகர்களுக்கான படத்தை கொடுத்த இயக்குநர் வினோத் இரண்டாம் பாதியில் வங்கியில் நடக்கும் மோசடிகளையும் கிரெடிட் கார்டு மூலம் உங்கள் பணம் எப்படி களவு போகின்றது உள்ளிட்ட டீட்டெய்லிங் கதையை சொல்லி கிளாஸ் எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் டாப்

தமிழ்நாட்டில் டாப்

தமிழ்நாட்டில் இந்த முறையும் முதல் நாள் வசூலில் நடிகர் அஜித் தான் முந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நள்ளிரவு காட்சி கூடுதல் பிளஸ் ஆக அமைந்துள்ளது. ப்ரீ புக்கிங்கிலேயே 10.21 கோடி வசூல் வந்துள்ளது. 1650 ஷோக்கள் திறக்கபட்ட நிலையில் 5 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. முதல் நாளில் 22 கோடி முதல் 26 கோடி வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் வாரிசு முந்தும்

உலகளவில் வாரிசு முந்தும்

உலகளவில் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் 20 கோடி ரூபாய் வரை அட்வான்ஸ் புக்கிங்கிலேயே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாள் முடிவில் துணிவு திரைப்படம் 28 கோடி முதல் 32 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை இரு படங்களின் தயாரிப்பு தரப்பும் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X