வாரிசு ரஞ்சிதமே ரஞ்சிதமேவுக்குப் போட்டியாக துணிவு சில்லா சில்லா… அஜித் ரசிகர்களுக்கு சில் அப்டேட்

சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஹெச் வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய்யின் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், துணிவு முதல் பாடல் குறித்தும் அப்டேட் வெளியாகியுள்ளது.

பொங்கலுக்கு துணிவு

பொங்கலுக்கு துணிவு

வலிமை படத்தைத் தொடர்ந்து அஜித் நடித்துள்ள துணிவு அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படம், முழுக்க முழுக்க ஆக்சன் டிரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. வங்கிக் கொள்ளையை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில், அஜித்துக்கு நெகட்டிவான ரோல் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வலிமை ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன.

ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

துணிவு படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இதுவரை படக்குழு எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. ஆனால், விஜய்யின் வாரிசு படத்தில் இருந்து 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' என்ற முதல் பாடல், இன்று மாலை வெளியாகிறது. இதனால், அஜித் ரசிகர்களும் துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போ என கேட்டு வந்தனர். இந்நிலையில், துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் பாடலை பாடியது யார்? டைட்டில் என்ன? போன்ற தகவல்கள் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

அனிருத்தின் சில்லா சில்லா

அனிருத்தின் சில்லா சில்லா

அஜித்தின் துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதேபோல், துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிளை அனிருத் பாடியுள்ளதாகவும், இந்தப் பாடல் 'சில்லா சில்லா' என்ற டைட்டிலில் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வேதாளம் படத்தில் 'ஆலுமா டோலுமா'' பாடலைப் பாடி அஜித் ரசிகர்களை தெறிக்கவிட்ட அனிருத், இப்போது துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சில்லா சில்லா' பாடலையும் பாடியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விரைவில் துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவிக்கவுள்ளதாம். இதனிடையே சில்லா சில்லா பாடல் ரெக்கார்டிங் போது, அனிருத், ஜிப்ரான், பாடலாசிரியர் வைசாக் எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது.

வாரிசுக்குப் போட்டியாக துணிவு

வாரிசுக்குப் போட்டியாக துணிவு

வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிளான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடலை விஜய் பாடியுள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்தப் பாடல் இன்று மாலை வெளியாகும் நிலையில், அதன் ப்ரோமா மட்டும் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது. இது மெலடி Folk பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிளை சில் பண்ணும் விதமாக அஜித்தும் 'சில்லா சில்லா' பாடல் மூலம் மாஸ் காட்டுவார் என அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X