துணிவு.. இந்த டைட்டிலில் 2020லயே இப்படியொரு படம் வந்திருக்கா? தலைப்பு பஞ்சம் தலை விரித்து ஆடுதே!

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள 61வது படத்திற்கு துணிவு என இயக்குநர் ஹெச். வினோத் தலைப்பு வைத்துள்ளார்.

அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோஷியல் மீடியாவே தெறிக்கவிட்டுள்ளது.

ஆனால், அதற்கு இணையாக படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ரூபாய் நோட்டு டிசைன்

ரூபாய் நோட்டு டிசைன்

வங்கி மற்றும் பணத்தை மையமாக வைத்து பேங்க் ஹெய்ஸ்ட் கான்செப்ட்டில் தான் துணிவு படம் உருவாகி வருகிறது என்கிற தகவல்களை உறுதி செய்யும் வகையில் துணிவு படத்தின் டிசைனே ரூபாய் நோட்டு டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நடிகர் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரு சேரில் சாய்ந்து படுத்தபடி கையில் துப்பாக்கி ஒன்றை வைத்துக் கொண்டு படு மாஸாக போஸ் கொடுத்துள்ளார்.

போஸ்டர் காப்பி

போஸ்டர் காப்பி

போனி கபூர் தயாரிப்பில் முன்னதாக வெளியான பவன் கல்யாணின் வக்கீல் சாப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போலவே அஜித்தின் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் இருக்கே, அதே மாதிரியான பொஷியனிலேயே அஜித்தும் போஸ் கொடுத்துள்ளாரே என விஜய் ரசிகர்கள் துணிவு போஸ்டரையும் வக்கீல் சாப் போஸ்டரையும் கம்பேர் செய்து கலாய்த்து வருகின்றனர். (வாரிசு படத்துக்கு அவங்களும் வச்சி செஞ்சிருந்தாங்க)

ஜெய்சங்கர் பட டைட்டில் இல்லை

ஜெய்சங்கர் பட டைட்டில் இல்லை

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் 1976ம் ஆண்டு வெளியான ஜெய்சங்கரின் துணிவே துணை என்கிற டைட்டில் தான் வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த டைட்டிலுக்கான NOC கிடைக்காத நிலையில், தான் படக்குழு சுருக்கமாக துணிவு டைட்டிலை படத்திற்கு வைத்து உள்ளனர் என்கிற பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் அடிபட்டு வருகிறது.

துணிவு டைட்டிலிலும் படம் இருக்கு

துணிவு டைட்டிலிலும் படம் இருக்கு

இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு இயக்குநர் கோடீஸ்வரன் என்பவர் துணிவு என்கிற டைட்டிலிலேயே ஒரு படத்தை இயக்கி உள்ளார். கிஷானி, சிஜே துஜா நடித்துள்ள அந்த படத்தின் போஸ்டரை தற்போது நெட்டிசன்கள் ஷேர் செய்து அஜித்தின் துணிவு படத்தின் தலைப்பும் காப்பி தான் என கிண்டல் அடித்து வருகின்றனர்.

பந்தயம் அடிக்கும்

பந்தயம் அடிக்கும்

அப்படியொரு டைட்டிலில் படம் வந்ததே யாருக்கும் தெரியாது. ஆனால், அஜித்தின் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதே இந்தியளவில் மிகப்பெரிய டிரெண்டாகி உள்ளது. படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் எல்லாம் மேட்டரே இல்லை, அதில் நடித்துள்ளது அஜித் அது போதும் எங்களுக்கு என ரசிகர்கள் விட்டுக் கொடுக்காமல் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X