Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு: நாங்களும் போட்டிதான்.. சவால்விடும் அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளரை தேடி வலைவீச்சு!
- Automobiles
டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐயே தூக்கி சாப்பிட்ரும் போல... மைலேஜ் தருவதில் செம்ம கில்லாடி!
- Finance
பெண்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மத்திய அரசு விரைவில் அறிவிக்கலாம்..!
- Sports
தோனியால் விக்கெட் கீப்பர்களின் நிலையே மாறிவிட்டது.. இனி வருவங்களாம் பாலோ பண்ணணும்.. டிராவிட் கருத்து
- Technology
iPhone கேமரா உடைந்தால் என்ன செய்வது? இது தெரியாம சர்வீஸ் கொடுத்தா பணம் போய்விடும்.!
- Lifestyle
சனி-சந்திர சேர்க்கையால் உருவான விஷ யோகம்: இந்த 3 ராசிக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு... உஷார்..
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
துணிவு கிளைமேக்ஸ் இதுதானா.. அப்படி மட்டும் இருந்தா செத்துருவேன் ஜமுனான்னு பங்கம் பண்றாங்களே!
சென்னை: வலிமை படத்தில் துப்பாக்கி எடுத்து சுடுவது கூட பாவம் என பஞ்ச் வசனம் பேசி கடைசியில் கிளைமேக்ஸில் வில்லன்களுக்கு எல்லாம் அட்வைஸ் கொடுத்து அனுப்பி வைத்த அஜித்தை மீண்டும் கெட்ட வார்த்தை, கன் எடுத்து டுமீல் டுமீல்னு சுட வைத்துள்ளார் இயக்குநர் ஹெச். வினோத் என துணிவு ட்ரெய்லரை பார்த்து ஒரு பக்கம் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மறுபக்கம் மக்கள் பணத்தை திருடுறீங்களே வெட்கமா இல்லை என்கிற வசனத்துக்கு வெட்கமா இல்லை என்கிற வசனத்தையும் என்ன மாறி ஒரு அயோக்கிய பயன்னு அஜித் பேசும் வசனங்களையும் வைத்து ஏகப்பட்ட மீம்கள் பறக்கின்றன.
இதில், எல்லை மீறி துணிவு படத்தின் கிளைமேக்ஸ் மட்டும் இப்படி இருந்தால் செத்துடுவேன் ஜமுனா என இயக்குநர் ஹெச். வினோத்தை பங்கமாக கலாய்க்கும் மீம் ஒன்றும் தீயாக பரவி வருகிறது.
சோலோவா அத்தனை தியேட்டரில் வெளியாகியும் வலிமை நிலைமை இதுதான்.. அப்போ துணிவு.. வாரிசை வெல்லுமா?

ஹீரோவும் நானே வில்லனும் நானே
பீஸ்ட் படத்தில் அந்த மாலை விஜய்யே ஹைஜாக் செய்திருந்தால் எப்படி இருக்கும் அதுதான் துணிவு படத்தின் கதையே என ட்ரோல்கள் பறக்கின்றன. துணிவு படத்தின் ட்ரெய்லரில் யுவர் பேங்க் எனும் வங்கியை ஹைஜாக் செய்யும் அஜித் மற்றும் அவரது டீம் அந்த வங்கியை கொள்ளையடிக்கும் காட்சிகள் தான் ட்ரெய்லர் முழுவதும் இடம்பெற்றுள்ளன. போலீஸார் அதனை தடுக்க எப்படி முயற்சி செய்கின்றனர் என்பதும், நடிகர் அஜித் என்ன காரணத்துக்காக அந்த வங்கி கொள்ளையில் ஈடுபடுகிறார் என்பதும் தான் துணிவு படத்தின் கதையாக இருக்கும் என ஏகப்பட்ட கெஸ்ஸிங் கதைகள் வலம் வருகின்றன.

பெயரில் ட்விஸ்ட் இருக்கு
கதாபாத்திரங்களின் பெயர்களை அறிவித்த படக்குழு ட்ரெய்லரில் ஆவது அஜித்தின் கதாபாத்திர பெயரை அறிவிப்பார்கள் என்று பார்த்தால் அதிலும் அதை ரிவீல் செய்யவில்லை. இந்நிலையில், படத்தில் கூட கிளைமேக்ஸ் வரை அஜித்தின் பெயர் ரிவீல் செய்யப்படாது என்றும் கிளைமேக்ஸில் தான் செம ட்விஸ்ட்டாக அவரது பெயர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விநாயக் மகாதேவ்
முதல் காட்சியிலேயே குழந்தையை தலை கீழாக தொங்கவிடுவது மற்றும் படம் முழுக்க ஆபாச வசனங்களை பேசுவது என துணிவு படத்திலும் அஜித் மங்காத்தா பாணியை பின் பற்றியுள்ள விவரங்கள் சென்சார் ரிப்போர்ட் மூலம் தெரியவந்துள்ள நிலையில், கிளைமேக்ஸில் விநாயக் மகாதேவ் என அஜித்தின் பெயர் அறிவிக்கப்படுமா? என்கிற கேள்வியும் வலம் வருகிறது.

செத்துடுவேன் ஜமுனா
துணிவு படத்தில் அஜித் வில்லனாக நடித்து உள்ள நிலையில், வங்கி கொள்ளையில் ஈடுபடுவதற்கு காரணமே ஃபிளாஷ்பேக்கில் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்ய காசு இல்லாமல் அவர் இறந்து போய்விட்டார். அதனால், அனாதை ஆசிரமத்துக்கு டொனேட் பண்ணதான் பேங்க் ராபரின்னு மட்டும் கிளைமேக்ஸ் இருந்தா செத்துருவேன் ஜமுனா என இயக்குநர் ஹெச். வினோத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

என்னவா இருக்கும்
ஏதாவது ஒரு அழுத்தமான ஃபிளாஷ்பேக் வைத்தால் தான் துணிவு படம் நிச்சயம் சூப்பர் ஹிட் அடிக்கும். அப்படியொரு கதை இல்லாமல் வெறுமனே இந்த படத்தை எடுக்க நினைத்திருக்க மாட்டார்கள் வரும் ஜனவரி 12ம் தேதி எல்லாம் தெரியத்தானே போகுது காத்திருப்போம் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். ஹெச். வினோத் எப்படி சம்பவம் பண்ண போறாருன்னு தெரியல!