Don't Miss!
- News
"அரோகரா".. பழனிக்கு பாதயாத்திரை கிளம்பிய வானதி சீனிவாசன்.. "இதயம் கனக்குதே" - உருகிய அண்ணாமலை!
- Finance
சியோமி மனு குமார் ஜெயின் ராஜினாமா.. சீன நிறுவன எதிர்காலம் கேள்விக்குறி தான்..!
- Lifestyle
பெற்றோர்களே! உங்க குழந்தை காலையில் சீக்கிரம் எழுந்திருக்காம இருக்கா? அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க!
- Sports
அட இது லிஸ்டலையே இல்லையே.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த அஸி, அணி.. டெஸ்ட் தொடருக்காக ஸ்பெஷல் யுக்தி!
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
என்னமாறி அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா.. துணிவு டிரைலர் எப்படி இருக்கு? பீஸ்ட் வைப்ஸ் வருதா?
சென்னை: அதே வெள்ளை சட்டை, மால் செட்டுக்கு பதில் பேங்க் செட் இதையெல்லாம் பார்க்க அப்படியே பீஸ்ட் வைப்ஸ் வரத்தான் செய்கிறது. ஆனால், அதற்குள் நடிகர் அஜித் செய்துள்ள வேலை தான் பீஸ்ட் படத்தில் இருந்து நிச்சயம் துணிவு படம் மாறுபடும் என எதிர்பார்க்கத் தூண்டுகிறது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை படத்தில் பைக் ரேஸ் காட்சிகளில் வானில் பறந்து மிரட்டிய அஜித் மற்ற நேரங்களில் புத்தராகவே வாழ்ந்து இருந்தது தான் அந்த படம் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கவில்லை.
ஆனால், இங்கே துணிவு படத்தில் சும்மா இறங்கி நடித்திருக்கிறார் அஜித் என்றே தெரிகிறது. அந்த வெள்ளை முடியும் நீண்ட தாடியும் ரியலி சூட்ஸ் அஜித் என்றே சொல்லலாம். அதே சமயம் மேக்கிங் விஷயத்தில் போனி கபூர் பணமே போடாமல் செட்டுக்கு மட்டும் தான் செலவு செய்தது போல தோன்றுவது சற்றே பயத்தையும் சேர்த்தே தருகிறது.
Thunivu
Trailer:
தாறுமாறு..
கேங்ஸ்டரா
வருவாருன்னு
பார்த்தா
மான்ஸ்டரா
வந்துருக்காரே..
துணிவு
டிரைலர்!

நம்பிக்கை கொடுக்கும் அஜித்
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் எல்லாம் அஜித்தின் மொத்த வித்தையையும் இறக்க தவறிய இயக்குநர் ஹெச். வினோத் இந்த துணிவு படத்தில் டைட்டிலுக்கு ஏற்றவாறே அஜித்தின் அட்ராசிட்டிகளை அன்லீஷ்டு செய்திருக்கிறார். மனுஷனும் கிடைத்த கேப்பில் பெரிய கெடாவே வெட்டியிருக்கார் என்று சொல்லலாம். அந்த மங்காத்தா சிரிப்பு எல்லாம் கொன்னுட்டீங்க போங்க தல என்றே சொல்ல தோன்றுகிறது.

டீசரா டிரைலரா
பரபரவென ஓடி முடிக்கும் காட்சிகளில் ஒட்டுமொத்த கதையும் அந்த பேங்க் செட்டுக்குள் தான் நடக்கிறது என்பதை தெளிவுப்படுத்தி உள்ளனர். படத்தின் நீளத்தை போலவே டிரைலரின் நீளமும் ரொம்பவே ஷார்ப்பாக இருப்பதால், இது டீசரா? அல்லது டிரைலரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. எந்த பாடல் காட்சிகளும் டிரைலரில் இடம்பெறாதது பெரிய ஆறுதல்.

மிரட்டும் மேனரிஸம்
அந்த மாஸ்க்கை கழட்டி விட்டு பேசுவதில் தொடங்கி போலீஸ் ஸ்டேஷனில் கைகளை தூக்கி தலைக்கு மேலே வைத்துக் கொண்டு பேசுவது 'என்னமாறி அயோக்கிய பய மேல கை வைக்கலாமா என கேட்கும் காட்சி, வங்கியில் என்ன பீரும் பிராந்தியுமா கேட்கப் போறோம் என தெனாவட்டாக பேசுவது என நெகட்டிவிட்டியை மொத்தமும் கொட்டித் தீர்த்து இருக்கிறார்.

குவாலிட்டி குறைவு
ஆனால், அண்ணாசாலையில் உள்ள வங்கி ஒன்றில் நடக்கும் பேங்க் ஹெய்ஸ்ட் படமாகவே துணிவு படம் இருக்கும் என்பதை இந்த 1 நிமிடம் 51 நொடி டிரைலர் விளக்குகிறது. ஆனால், சிஜி வேலைகளுக்கு எல்லாம் செலவு செய்யாமல் வாட்டர் ரைடு காட்சிகள், ஹெலிகாப்டர் வெடிப்பது உள்ளிட்ட சிஜி காட்சிகள் மற்றும் படத்தின் விஷுவல் குவாலிட்டியே ஏதோ புகை மண்டலமாக காட்சி அளிப்பது போல இருப்பதை தவிர்த்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

பீஸ்ட் வைப்ஸ்
அஜித்தின் துணிவு படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் அப்படியே விஜய்யின் பீஸ்ட் படத்தின் 2ம் பாகம் போல இருக்கிறது என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதே வெள்ளை சட்டை, செட்டுக்குள்ளே படம் போன்ற விஷயங்கள் அதை எண்ண வைக்கத் தான் தோன்றுகிறது. அதையும் மீறி திரைக்கதையையும் வங்கி கொள்ளையில் அஜித் ஏன் ஈடுபடுகிறார் என்பதற்கான வேலிட் ரீசனை வைத்தாலே போதும் இந்த படம் பந்தயம் அடிக்கும்!