சில்லா..சில்லா..கெத்துக்காட்ட வருது துணிவு டிரைலர்..புத்தாண்டுக்கு தரமான சம்பவம் லோடிங்!
சென்னை : அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த துணிவு திரைப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
துணிவு திரைப்படத்தில் அஜித்குமார், மஞ்சுவாரியர்,சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

அஜித்தின் துணிவு
அஜித்குமாரின் 61வது படமான இப்படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது வழக்கமான அஜித் திரைப்படத்திற்கு 'வி' சென்டிமெண்ட் வொர்க் அவுட் ஆகும் என்பதால், இந்த படத்திற்கும் 'வி' எழுத்தில் தான் தலைப்பு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்திற்கு துணிவு என்ற டைட்டிலை வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு படக்குழு அமர்க்களப்படுத்தியது.

பொங்கலுக்கு ரிலீஸ்
துணிவு படத்தின் படப்பிடிப்பபு ஹைதராபாத், பேங்காங், சென்னை போன்ற இடங்களில் நடந்து முடிந்தன. இத்திரைப்படம் பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. விஜய்யின் வாரிசு படம் ஜனவரி 12ந் தேதி வெளியாக உள்ளதால், எந்த படம் மாஸ்காட்டப்போகுது என இணையத்தில் ரசிகர்கள் சண்டைபோட்டு வருகின்றனர்.

3 பாடல்களும் ஹிட்
இத்திரைப்படத்தில் இருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டர் என வெளியான மூன்று பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, இப்படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். நிறைய பட்டாசு வாங்கிக்கோங்க... என அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

யார் யாருக்கு என்னென்ன ரோல்
துணிவு படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்று நேற்று படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்தது. இதில் மஞ்சுவாரியார் கண்மணி கதாபாத்திரத்திலும், சுதாகரன் அஜித்குமார் என்ற கதாபாத்திரத்திலும், சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்த ஜான் கொக்கைன் கிருஷ் என்ற ரோலிலும், பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் "மை பா" எனும் தொலைக்காட்சி செய்தியாளர் கேரக்டரில் நடிப்பதாகவும், ஜி எம் சுந்தர் முந்தழகன், வீரா ராதா என்ற கதாபாத்திரத்திலும், அஜய் ராமச்சந்திரன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதற்கான கேரக்டர் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.

புத்தாண்டு பரிசு
துணிவு திரைப்படம் வெளியாக உள்ளதால் படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதில், துணிவு படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்டை படக்குழு நேற்று வெயிட்டுள்ளது. துணிவு படத்தின் டிரைலர் டிசம்பர் 31ந் தேதியான இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளனர். புத்தாண்டை தரமான அப்டேட்டோடு கொண்டாட தயாராக உள்ளனர்.

அஜித் 62
துணிவு படம் வெளியான பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள அஜித் 62 படத்திற்கான வேலைகள் தொடங்கும் என்று நம்பப்படுகிறது. அஜித்தின் 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











