அஜித் எப்போ ஏகே 61 ஷுட்டிங்கில் கலந்து கொள்வார்?...அஜித்தை பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை : நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹெச்.வினோத் - அஜித் - போனி கபூர் காம்போ மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ஏகே 61. இந்த படத்தின் ஷுட்டிங் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைடடில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட் ஆகியன, மறைந்த நடிகையும், தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவியுமான ஸ்ரீதேவியின் பிறந்தநாளாக ஆகஸ்ட் 13 ம் தேதியன்று வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.

ஏகே 61 படம் பற்றி இதுவரை எந்த அப்டேட்டும் வெளியிடாததால் வலிமை படத்தை போல் ஏகே 61 படத்திற்கும் ரசிகர்கள் அப்பேட் கேட்க துவங்கி விட்டனர்.எப்போ அப்டேட் வெளியிடுவார்கள் என ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

அஜித் இல்லாமலும் ஷுட்டிங்

அஜித் இல்லாமலும் ஷுட்டிங்

ஏகே 61 படத்தின் முக்கியமான காட்சிகள் ஐதராபாத்தில் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. அதைத் தொடர்ந்து புனேயில் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அஜித் ஃபாரின் டூர் புறப்பட்டு சென்றார். இந்த கேப்பில் அஜித் தவிர மற்ற நடிகர், நடிகைகளை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை டைரக்டர் வினோத் எடுத்து முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

 லீக்கான வங்கி செட் போட்டோ

லீக்கான வங்கி செட் போட்டோ

அஜித், இந்தியா திரும்பியதும் ஏகே 61 ஷுட்டிங்கில் கலந்து கொள்வார் என்று பார்த்தால் அவர் துப்பாக்கி சுடுதல் பயிற்சி, போட்டி என சென்று விட்டார். இதற்கிடையில் சென்னை மவுண்ட் ரோடு வங்கி கிளை போல் அமைக்கப்பட்ட செட்டின் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் லீக்காகி செம வைரலானது.

அஜித் எப்போ ஷுட்டிங்கிற்கு வருவார்

அஜித் எப்போ ஷுட்டிங்கிற்கு வருவார்

லேட்டஸ்ட் தகவலின் படி, ஏகே 61 படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் அடுத்த வாரம் சென்னையில் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் படத்தில் லீட் ரோலில் நடிக்கும் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக வட சென்னை பகுதியில் செட் அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அஜித்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

அஜித்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

ஏற்கனவே சென்னையில் எடுக்கப்பட்ட சில ஸ்டண்ட் காட்சிகளின் போது அஜித் வந்திருப்பார் என ரசிகர்கள் கூடிய வீடியோ வெளியானது. இந்நிலையில் உண்மையிலேயே அஜித் ஷுட்டிங்கில் பங்கேற்க போகிறார் என்ற தகவல் தீயாய் பரவி வருகிறது.இதனால் அஜித்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

 ஏகே 61 டைட்டில் இது தானா

ஏகே 61 டைட்டில் இது தானா

இந்த மாதத்தில் ஏகே 61 டைட்டில் வெளியிடப்படலாம் என்றும், படத்திற்கு "வல்லமை" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏகே 61 படத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் பண்டிகை நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Recommended Video

AjithKumar | எதிரே வந்த பெண், Thala செய்த காரியம்! நெகிழும் ரசிகர்கள் *Kollywood | Filmibeat Tamil
ஏகே 61 தீபாவளி ரிலீசா

ஏகே 61 தீபாவளி ரிலீசா

அதே சமயம், அடுத்த வாரம் சென்னையில் நடக்க உள்ளதான் இறுதிக்கட்ட ஷுட்டிங் என்றும், அதற்கு பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு முயற்சி செய்து வருவதாக மற்றொரு தகவலும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X