ஏகே62 படத்துலயும் செம ஹேண்ட்ஸம் ஆன அஜித் லுக் லோடிங்.. இப்பவே மனுஷன் எப்படி இருக்காரு பாருங்க!

சென்னை: நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் லுக் ரொம்பவே ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், துணிவு படத்தில் டோட்டலாக லுக்கை மாற்றி ரசிகர்களையும் விமர்சகர்களையும் மிரட்டி விட்டார் அஜித்.

ஹேண்ட்ஸம் என்றும் ஆணழகன் என்றும் காதல் மன்னன் என்றும் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட வந்தவர் நடிகர் அஜித்.

அஜித்தின் அழகில் மயங்காத நடிகைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்த அஜித் சமீப காலமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறினாலும் அதையும் புதிய ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டாக மாற்றி விட்டார்.

என் ஜார்ஜ் க்ளூனி

என் ஜார்ஜ் க்ளூனி

துணிவு படத்தை பார்த்து விட்டு நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் மை ஜார்ஜ் க்ளூனி என பிரபல ஹாலிவுட் நடிகருடன் நடிகர் அஜித்தை ஒப்பிட்டு போட்ட கமெண்ட் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. தென்னிந்திய நடிகைகள் பலரும் அஜித்தின் அழகையும் அன்பான மனதையும் பலமுறை பாராட்டி பேசி உள்ளனர்.

பஜன்லால் சேட் விமர்சனம்

பஜன்லால் சேட் விமர்சனம்

அப்படி கெத்தாக இருந்த நடிகர் அஜித் கடந்த ஆண்டு வெளியான வலிமை படத்தில் சிகப்பு நிற ஹேர் கலரிங் உடன் க்ளீன் ஷேவில் நடித்திருந்தார். அவரது தோற்றத்தை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பஜன்லால் சேட் என்றே கலாய்த்து பேசியது அஜித் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது. ஆனால், அந்த ப்ளூ சட்டை மாறனே துணிவு லுக்கை பார்த்து பாராட்ட வைத்திருந்தார் அஜித்.

தூள் கிளப்பிய துணிவு லுக்

தூள் கிளப்பிய துணிவு லுக்

இயக்குநர் வினோத்துக்கே அடுத்த படத்திற்கான டிப் தரும் அளவுக்கு தனது உறவினர் நிகழ்ச்சிக்காக நடிகர் அஜித் வைத்த லுக்கை பார்த்து பிடித்துப் போன இயக்குநர் வினோத். அதிலிருந்து சில மாற்றங்களை செய்து துணிவு படத்தின் லுக்கை டிசைன் செய்தோம் என்றார். அஜித்தின் துணிவு லுக்கிற்காகவே ரசிகர்கள் அந்த படத்தை பலமுறை பார்த்து வருகின்றனர்.

விமான நிலையத்தில் அஜித்

விமான நிலையத்தில் அஜித்

இந்நிலையில், சமீபத்தில் விமான நிலையத்தில் நடிகர் அஜித்தை பார்த்த விஜய் ரசிகை ஒருவர் அஜித்தின் கணிவான குணத்தை பார்த்து அஜித் ரசிகையாகவே மாறிவிட்டதாக அவருடைய லேட்டஸ்ட் லுக் போட்டோவை ஷேர் செய்து போட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

ஏகே 62லும் மாஸ் லுக்

ஏகே 62லும் மாஸ் லுக்

துணிவு படத்தின் தோற்றத்தில் இருந்து சற்றே மாறுபட்டு ஏகே 62 படத்திலும் ஹேண்டஸம் ஆன லுக்கிற்கு நடிகர் அஜித் தன்னை மாற்றி வருகிறார் என இந்த போட்டோவை பார்த்த அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் விஜய்சேதுபதியையே செம க்யூட்டாக காட்டுவார், அஜித் கிடைத்தால் சும்மாவா விடுவார் என கமெண்ட்டுகள் தெறிக்கின்றன.

அடுத்த மாதம் ஆரம்பம்

அடுத்த மாதம் ஆரம்பம்

வரும் பிப்ரவரி மாதம் ஏகே 62 படத்தின் பூஜை போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், சாய் பல்லவி என ஹீரோயின்கள் லிஸ்ட் பெரிதாக போய்க் கொண்டே இருக்கிறது. கூடிய விரைவில் அஜித்தின் ஏகே 62 படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்ஷா 2

பாட்ஷா 2

ஏகே 62 படமே கேங்ஸ்டர் படம் என சொல்லப்படும் நிலையில், அடுத்ததாக பாட்ஷா 2 படத்திலும் அஜித் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நெகட்டிவ் ரோல் நல்லா செட் ஆகுது என்பதால் தொடர்ந்து கேங்ஸ்டர் படங்களிலேயே அஜித் கவனம் செலுத்தி வருகிறாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X