AK 62 படத்துக்குப் பின்னர் நடிப்புக்கு பிரேக்… பாலிவுட் ஹீரோ வழியில் அஜித்: என்ன தல இது?

சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வருகிறது.

துணிவைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.

ஏகே 62 படத்தை முடித்ததும் நடிப்புக்கு பிரேக் எடுக்க அஜித் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கலுக்கு அஜித்தின் துணிவு

பொங்கலுக்கு அஜித்தின் துணிவு

அஜித் நடித்துள்ள துணிவு பொங்கல் ரேஸில் களமிறங்குகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளது. துணிவு திரைப்படத்தைத் தொடர்ந்து 'ஏகே 62'ல் நடிக்க ரெடியாகிவிட்டார் அஜித். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். ஏகே 62 படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது. அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால், ரசிகர்களிடம் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

நடிப்புக்கு பிரேக்

நடிப்புக்கு பிரேக்

விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ஏகே 62 விவசாயத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித் இதில் விவசாயியாக நடிப்பதாகவும், ஏகே 62 படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தை முடித்துவிட்டு அஜித் நடிப்புக்கு பிரேக் எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ஒரு வருடம் மட்டும் பிரேக் எடுத்துவிட்டு, பைக்கில் வேர்ல்ட் டூர் செல்ல அஜித் ப்ளான் செய்துள்ளாராம். ஏற்கனவே இந்தியா முழுவதும் பைக்கில் டிரிப் அடித்து வரும் அஜித், அடுத்து வேர்ல்ட் டூருக்கு ரெடியாகிவிட்டாராம்.

ரசிகர்கள் அப்செட்

ரசிகர்கள் அப்செட்

ஏகே 62 படத்தின் ஷூட்டிங் ஜனவரி மாதம் தொடங்கி, வேகமாக முடிந்துவிடும் என தெரிகிறது. இதனால், அடுத்தாண்டு இறுதிக்குள் வேர்ல்ட் டூரை அஜித் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் பைக் டூர் செல்வது பலரிடம் வரவேற்பைப் பெற்றாலும், ஏகே 63 படத்தை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஏற்கனவே வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டும் நடித்து வரும் அஜித், ஒரு வருடம் நடிக்கவே மாட்டார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை என்றே தெரிகிறது.

ஏகே 63, ஏகே 64 அப்டேட்

ஏகே 63, ஏகே 64 அப்டேட்

ஆனாலும், ஏகே 63, ஏகே 64 படங்களுக்கான டைரக்டர் யார் என முடிவு செய்துவிட்டு தான் அஜித் டூர் போகிறாராம். ஏற்கனவே கிடைத்த தகவலின் படி அஜித்தின் ஏகே 63 படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் எனவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஏகே 64 படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கவுள்ளராம். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. திட்டமிட்டபடி அஜித் ஒரு வருடம் பைக்கில் வேர்ல்ட் டூர் சென்றால், 2025ல் தான் அடுத்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் சில சொந்த காரணங்களுக்காக சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகுவதாக பாலிவுட் நடிகர் அமீர்கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X