twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்படி ஒரு பிளானே இல்ல.. சோஷியல் மீடியாவில் இணைவதாக வெளியான தகவல்.. அஜித் தரப்பு அதிரடி ஃபுல்ஸ்டாப்!

    |

    சென்னை: நடிகர் அஜித் எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை என அவரது சட்ட ஆலோசகர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    Recommended Video

    Thala Ajith EXCLUSIVE video Clip From Valimai Shooting Spot | H. Vinoth | Boney Kapoor

    தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கிறார்.

    இவர் வெளியே வருகிறார் என்றாலே அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். சமூக வலைதளங்களில் இருந்து நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே விலகி விட்டார் நடிகர் அஜித்.

    கோரிக்கை

    கோரிக்கை

    ஆனால் அவர் சார்ந்த ஏதாவது ஒரு விஷயம் என்றால் ட்ரென்ட் செய்து டிவிட்டரையே தெறிக்க விட்டுவிடுவார்கள், அவரது ரசிகர்கள். ரஜினி, கமல், விஜய் உட்பட பெரும்பாலான நடிகர்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ள நிலையில் நடிகர் அஜித்தும் சமூக வலைதளங்களுக்கு வரவேண்டும் என நீண்ட ஆண்டுகளாக ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அறிக்கை

    டிவிட்டர் நிர்வாகமே கூட அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் நடிகர் அஜித் சமூக வலைதளங்களில் இணைய உள்ளதாக அவரது கையெழுத்துடன் ஒரு அறிக்கை வெளியாகி வைரலானது. அந்த அறிக்கையில், என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன்.

    காலம் வந்துவிட்டது

    காலம் வந்துவிட்டது

    இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கையெழுத்து

    கையெழுத்து

    மேலும் இதனை காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் அஜித் குமாரின் கையொப்பமும் இடம்பெற்றிருந்தது. இந்த அறிக்கை பெரும் பரப்பை ஏற்படுத்தியது. அவரது ஸ்டைலிலேயே அவரின் கையெழுத்துடன் இடம் பெற்றிருந்ததால் உண்மைதான் என்று நம்பினர் ரசிகர்கள்.

    சட்ட ஆலோசகர்கள்

    சட்ட ஆலோசகர்கள்

    இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதன்படி அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் அஜித் சார்பாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி மார்ச் 6, 2020தேதியில் அஜித்குமார் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவது அவரது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் சமூக ஊடங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது போல் உள்ளது.

    போலியான அறிக்கை

    போலியான அறிக்கை

    அந்தக் கடிதம் அஜித்குமார் அவர்களின் பெயருடன் ஒரு போலியான தலைப்பில் அச்சிடப்பட்டு மேலும் அவரது போலி கையொப்பத்தையுத் இணைத்திருப்பதை பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கிறது. அந்தக் கடிதம் அஜித்குமார் அவர்களால் வெளியிடப்படவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவிக்க அவர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறார்.

    மீண்டும் வலியுறுத்தல்

    மீண்டும் வலியுறுத்தல்

    அஜித்குமார் கடந்த காலத்தில் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு எந்தவொரு சமூக ஊடகக் கணக்குகளும் இல்லை என்றும் சமூக ஊடங்களின் எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கத்தையும் கொண்டிருக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை என்றும் பலமுறை தெரிவித்துள்ளார். அஜித் குமார் கீழ்க்கண்டவற்றை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறார்.

    மோசடி குற்றவாளி

    மோசடி குற்றவாளி

    a) அவருக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை. b) அவர் எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை. c) சமூக ஊடகங்களின் எந்தவொரு கருத்தையும் மற்றும் ரசிகர் பக்கத்தையும் குழுவையும் ஆதரிக்கவில்லை. d) மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக் கூறி வந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை. இறுதியாக தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் எங்கள் கட்சிக்காரரின் கையொப்பத்தை மோசடி செய்த குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கு தேவையான மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் முடிந்தவரை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட விரும்புகிறார்.

    ட்ரென்டிங்

    ட்ரென்டிங்

    இவ்வாறு அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து #AjithKumar என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Fake statement roaming arround in Actor Ajith name. Ajith legal team has released the statement about the fake statement and Ajith stand to join in Social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X