»   »  யார் இந்த அஜீத்? - அரபியர்கள் கேட்டாங்களாம்!

யார் இந்த அஜீத்? - அரபியர்கள் கேட்டாங்களாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ajith Kumar
அஜீத் குமாரின் பில்லா 2 படத்துக்கு முதல் நாள் காட்சிக்கு கத்தாரில் கிடைத்த வரவேற்பைப் பார்த்து யார் இந்த அஜீ்த் குமார் என்று அரபிக்காரர்கள் கேட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அஜீத் குமாரின் பில்லா 2 நேற்று தமிழகம் மட்டுமின்றி உலகின் சில பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது. கத்தாரில் உள்ள தமிழர்களுக்கு அஜீத்தின் படத்தை கடந்த வியாழக்கிழமையே பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. படம் ரிலீஸான முதல் நாள், ஏகப்பட்ட கூட்டம் திரண்டுவிட்டதாம்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிவிட்டார்களாம். தியேட்டர் இருக்கும் பக்கமாகச் சென்ற அரபுக்காரர்கள் சிலர் 'யார் இந்த அஜீத் குமார்?' என்று தங்களைக் கேட்டதாக, அஜீத்தின் ரசிகர்கள் சிலர் 'பெருமை'யுடன் கூறியுள்ளனர்.

நாம என்ன கத்தார்ல போயி பாத்தமா.. சொன்னா கேட்டு வைக்க வேண்டியதுதான்!

English summary
Ajith Kumar's Billa 2 fever grips his fans in Qatar. On seeing great response for Billa 2 in Qatar, Arabs are wondering as to who Ajith Kumar is.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil