twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திடீரென கழுதை மீம் போட்ட அஜித் மேனேஜர்.. இப்போ யாருக்கு என்ன சொல்ல வர்றீங்க என ரசிகர்கள் கேள்வி?

    |

    சென்னை: குறை சொல்பவர்கள் என்ன செய்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது, நாம செய்றதை செஞ்சிட்டே இருப்போம் என்கிற கழுதை மீமை நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பதிவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    சர்வதேச அளவில் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டு நச்சரித்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான வலிமை திரைப்படம் ரிலீசானதும் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய தவறிய நிலையில் விமர்சன ரீதியாக படு தோல்வியை சந்தித்தது.

    நடிகர் அஜித் மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் இன்னொரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இப்படியொரு மீமை ஏன் தற்போது சுரேஷ் சந்திரா போட்டுள்ளார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    ஆத்தாடி... ஒரு பாட்டுக்கு 30 டிரஸ்ஸா?.. “தி லெஜண்ட்“ பட சுவாரசியம் !ஆத்தாடி... ஒரு பாட்டுக்கு 30 டிரஸ்ஸா?.. “தி லெஜண்ட்“ பட சுவாரசியம் !

    வலிமை குறைவு

    வலிமை குறைவு

    வலிமையாக வந்திருக்க வேண்டிய வலிமை படம் சற்றே வலிமை குறைவாக வெளியாகி படத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஹாலிவுட் லெவலுக்கு பைக் ஸ்டன்ட் காட்சிகள் உள்ள திரைப்படத்தில் அஜித்தின் மேனரிஸத்தை ஆரம்பத்தில் இருந்தே துரு துருவென வைக்காமல் ஸ்லோவாக கொண்டு சென்றது மற்றும் அம்மா சென்டிமென்ட் காட்சியில் அழுத்தம் இல்லாதது தான் படத்தின் தோல்விக்கு காரணம் என விமர்சிக்கப்பட்டது.

    மீண்டும் வினோத் இயக்கத்தில்

    மீண்டும் வினோத் இயக்கத்தில்

    சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் வினோத். அவர் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார், பைக் ரேஸ் காட்சிகள் உள்ளன. படம் மிரட்டும் என எதிர்பார்த்த நிலையில், ஸ்லோவாக நகர்ந்த கதையால் படத்துக்கு பெரிய மைனஸ் ஏற்பட்டது. இந்நிலையில், அதையெல்லாம் சரி செய்து வேற லெவலில் பேங்க் ஹெயிஸ்ட் படமாக ஏகே 61 படத்தை வினோத் இயக்கி வருகிறார்.

    ஹோட்டல் கதை

    ஹோட்டல் கதை

    அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஹோட்டல் கதையாக அஜித் படம் உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித்தின் தீவிர ரசிகரான விக்னேஷ் சிவன் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக தரமான ஒரு படத்தை எடுத்துத் தர எந்தளவுக்கு உழைப்பை போட முடியுமோ போட்டு படம் எடுப்பேன் எனக் கூறியுள்ளார்.

    5வது முறை கூட்டணி

    5வது முறை கூட்டணி

    சிறுத்தை சிவா இயக்கத்தில் ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களில் நடிகர் அஜித் இணைந்து நடித்தார். இந்நிலையில், விக்னேஷ் சிவன் படத்தை முடித்து விட்டு மீண்டும் சிறுத்தை சிவா கூட்டணியில் இன்னொரு படத்திலும் அஜித் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கழுதை மீம்

    கழுதை மீம்

    கழுதையுடன் செல்லும் இரு தம்பதியினரை பார்த்து, அவர்களுக்கு கழுதையில் ஏறி சவாரி செய்யக் கூட தெரியவில்லையே என சிலர் கிண்டல் செய்கின்றனர். பின்னர் கழுதையில் ஏறி சவாரி செய்யும் போது, ரொம்ப கொடூரமானவங்க ஒரு சின்ன கழுதை மேல் இருவர் ஏறி சவாரி செய்தால் என்ன ஆகும் என விமர்சிக்க, அந்த தம்பதியினர் என்ன செய்தாலும் அவர்கள் விமர்சித்துக் கொண்டே தான் இருப்பார்கள் என்கிற மீமை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா, அஜித் ஹேட்டர்களுக்கான பதிவாக இதனை பதிவிட்டு இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

    ரசிகர்கள் கேள்வி

    ரசிகர்கள் கேள்வி

    இப்போது என்ன ஆச்சு, ஏன் இப்படி ஒரு மீமை போடுறீங்க என ரசிகர்கள் சுரேஷ் சந்திராவை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர். வலிமை படத்தை போலவே ஏகே 61 படமும் சொதப்பி விடும் என்பதை சூசகமாக சொல்கிறீர்களா என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர், சமீபத்தில் வந்த சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களுகு மோசமான விமர்சனங்கள் எழவில்லையே ஏன்? என்றும் அதுபோன்ற ஒரு படத்தைத் தானே ரசிகர்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

    இதுதான் காரணமா

    இதுதான் காரணமா

    சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ஓவர்சீஸ் மார்க்கெட்டுகளில் அஜித்தின் வலிமை பட வசூலை முறியடித்தது தான் இப்படியொரு ட்வீட்டுக்கு காரணமா? என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். சினிமாவில் வெற்றி, தோல்வி வருவது இயல்பு தான். தோல்விக்கு அடுத்து வெற்றியை கொடுக்க முயற்சிக்க வேண்டுமே தவிர சப்பைக் கட்டு கட்டக் கூடாது என அட்வைஸ் வேறு செய்து வருகின்றனர்.

    English summary
    Ajith manager Suresh Chandra’s donkey meme stirs so many doubts among Tamil Cinema Fans. They also trolled him for not accepting the failure in below comments.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X