»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் அஜீத்தின் ஆஸ்தான தயாரிப்பாளரும், நெருங்கிய நண்பருமான நிக் ஆர்ட்ஸ் பட நிறுவன அதிபர்சக்கரவர்த்திக்கு எதிராக சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

நடிகர் அஜீத்தின் நெருங்கிய நண்பராந சக்கரவர்த்தி. அஜீத் நடித்த வாலி, சிட்டிசன், வில்லன் ஆகிய படங்களைத்தயாரித்துள்ளார். இவர், அஜீத்தின் பினாமியாகக் கருதப்படுகிறார்.

சென்னையைச் சேர்ந்த ராமநாதன் என்பவரிடம் இவர் ரூ. 2 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதைத் திருப்பிச்செலுத்துவதற்காக 2 காசோலைகளைக் கொடுத்திருந்தார். ஆனால், சக்கரவர்த்தியின் கணக்கில் பணம் இல்லாதகாரணத்தால் காசோலைகள் திரும்பி வந்து விட்டன.

இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ராமநாதன். இதுதொடர்பாக நீதிமன்றத்தில்ஆஜராகும்படி சக்கரவர்த்திக்கு, நீதிபதி விஜயகாந்த் பலமுறை சம்மன் அனுப்பினார். ஆனால் சக்கரவர்த்திஆஜராகவும் இல்லை, வக்கீல் மூலம் விளக்கம் அளிக்கவும் இல்லை.

இதையடுத்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்படி பிடிவாரண்ட் பிறப்பித்து போலீஸாருக்குஉத்தரவிட்டடுள்ளார் நீதிபதி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil