»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்தில் நடைபெறும் கார் பந்தய பயிற்சிக்காக அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் லண்டன் கிளம்பினார்.

சீனா, ஜப்பான், மலேசியா, கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற பி.எம்.டபிள்யூ ஏசியாசாம்பியன்ஷிப் கார் பந்தயங்களில் 14 ரேஸ்களில் கலந்து கொண்டார் அஜீத். இதில் சில போட்டிகளில் 12 வதுஇடமும், சில போட்டிகளில் 8,6 வது இடங்களும் கிடைத்தன.

இந் நிலையில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கார்ப் பந்தயத்தில் கலந்து கொள்ள முடிவெடுத்திருக்கும் அவர்,அதற்கான பயிற்சிக்காக ஷாலினியுடன் லண்டன் புறப்பட்டார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியஅஜீத்:

ஆசியப் போட்டிகளில் 12வது இடம் கிடைத்தது எனக்குப் பெருமைதான். அடுத்த ஆண்டு மார்ச் முதல் பிரிட்டனில்நடைபெறவுள்ள 24 போட்டிகளிலும், பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள 2 போட்டிகளிலும் கலந்து கொள்ளஉள்ளேன்.

பிரிட்டிஷ் பார்முலா-3 ஸ்காலர்ஷிப் கிளாஸ் கார் பந்தயத்தில், 280 பி.ஹெச்.பி மற்றும் 2,000 சி.சி. கொண்ட காரைமணிக்கு 280 கி.மீ வேகத்தில் ஓட்ட உள்ளேன். அதற்கான பயிற்சியை மேற்கொள்ளவதற்காகத்தான் இப்போதுஇங்கிலாந்து செல்கிறேன்.

24ம் தேதி முதல் 26ம் தேதி வரை கடுமையான பயிற்சியில் ஈடுபட உள்ளேன். 29ம் தேதி இந்தியா திரும்புகிறேன்.

அதன் பிறகு கொச்சியில் நடைபெறும் ‘ஜனா’ என்ற படத்தின் சூட்டிங்கில் கலந்து கொள்கிறேன். அடுத்த வருடம்மார்ச் மாதத்திற்குள் ‘ஜனா’, ‘ஜி’ படங்களை முடித்துவிட்டு முழு மூச்சாய் கார்ப் பந்தயங்களில் கலந்து கொள்ளமுடிவு செய்துள்ளேன்.

சர்வேதச பந்தயங்களில் கலந்து கொள்ள எனக்கு 3 கோடி ரூபாய் செலவாகிறது. நிக் ஆர்ட்ஸ் பட நிறுவனமும், நிக்ஆடியோ நிறுவனமும் எனக்கு ஸ்பான்ஸர்ஷிப் செய்கின்றன. அந்த நிறுவனங்களின் பெயர்களை எனதுஉடைகளில் பயன்படுத்தி அவர்களின் தயாரிப்புகளைப் பிரபலப்படுத்துவேன் என்றார்.

நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சக்கரவர்த்தியை அஜீத்தின் பினாமி என்கிறது கோடம்பாக்கம். எனிவே,ஆல் த பெஸ்ட் அஜீத்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil