»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டனில் நடைபெற்ற கார்ப் பந்தயத்தில் நடிகர் அஜீத்குமார் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரிட்டிஷ் பார்முலா-3 என்ற கார்ப் பந்தயம் லண்டன் நகருக்கு அருகிலுள்ள டெர்பி என்ற இடத்தில் நடைபெற்றது.இதில் அஜீத்குமார் கலந்து கொண்டார்.

ஸ்காலர்ஷிப் கிளாஸ் என்ற பிரிவில் ஏ, பி என்ற இரு அணிகளைச் சேர்ந்த 22 கார்ப்பந்தய வீரர்கள் கலந்துகொண்டார்கள். அஜீத்குமார் பி அணியில் இடம் பெற்றிருந்தார்.

மொத்தம் நடந்த 2 பந்தயங்களில் முதல் பந்தயத்தில் அஜீத் ஆறாவதாக வந்தார். இரண்டாவது பந்தயத்தில் 3வதுவந்தார்.

3 கோடி ரூபாய் வரை செலவு பிடிக்கும் இந்தப் பந்தயத்துக்கு நிக் ஆர்ட்ஸ் பட நிறுவனமும், நிக் ஆடியோநிறுவனமும் அஜீத்துக்கு ஸ்பான்ஸர் செய்துள்ளன. இந்தப் பந்தயத்துக்காக கடந்த வருடம் நவம்பர் மாதம் லண்டன்சென்று அஜீத் பயிற்சியில் ஈடுபட்டார்.

இப்போது ஜனா, அட்டகாசம், ஜி, மிரட்டல் ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil