»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் அஜீத்குமார் இங்கிலாந்து நாட்டில் நடக்கும் கார் பந்தயத்தில் 24 புள்ளிகளைப் பெற்று தர வரிசையில் முன்னேறி வருகிறார்.

எப்.3 ஸ்காலர்ஷிப் சாம்பியன் போட்டியில் 2-வது மற்றும் 3-வது பந்தயங்களில் அஜீத்தின் வேகம் கூடியுள்ளது. இன்னும் அவர் 9 பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

3-வது பந்தயம் முடிந்த பின்னர் லண்டனில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

கடைசி 2 பந்தயங்களில் இன்னும் அதிக வேகம் காட்ட நான் முயற்சிக்கவில்லை. அப்படி செய்திருந்தால் மற்றொரு காருடன் மோதவோ அல்லது எனது கார் சுழற்றியடிக்கப்படவோ வாய்ப்பிருக்கிறது. இந்த போட்டியில் இறுதிவரை களத்தில் இருப்பது தான் எனது எண்ணம்.

எப்.3 போட்டியில் முதன் முறையாக கலந்து கொள்கிறேன் என்பதால், எல்லா சுற்றுப் பாதையும் எனக்கு புதியது.

ஒவ்வொரு பந்தயத்துக்கு நடுவிலும் சினிமாவில் நடிக்க நான் இந்தியா செல்ல வேண்டியிருப்பதால் பிராக்டீஸ் செய்ய நேரம் போதுமானதாக இல்லை என்றார்.

Please Wait while comments are loading...